கன்னி ஜனவரி மாத ராசி பலன் 2023!

புதனின் பார்வை மிதுனத்தின் மீது விழுகின்றது. தொழில், வேலைரீதியான விஷயங்கள் சிறப்பானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைக்கான தேர்வினை புதன் பகவான் கொடுப்பார்.

சனி பகவானின் பெயர்ச்சி 5 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்திற்கு மாறுகின்றது. சனி பகவானின் பெயர்ச்சியால் தடங்கல்கள், பிரச்சினைகள், இடர்ப்பாடுகள் என அனைத்தும் விலகும் காலமாக இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை நீண்ட காலமாக வரன் தேடி வருவோருக்கு தடங்கல்கள் நிறைந்த காலமாகவே இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான மனஸ்தாபங்கள் அறிவுப்பூர்வமான விளக்கங்களால் சரியாகும்.

தவறான புரிதலால் ஏற்பட்ட பல பிரச்சினைகளை கணவன்- மனைவி இருவரும் புரிந்து கொள்வார்கள். புதன் பகவான் – குரு பகவான் கேந்திரத்தில் சந்திப்பதால் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த எதிர்காலத் திட்டங்கள் குறித்து தெளிவான சிந்தனையினைக் கொடுப்பர்.

இல்லத்தரசிகளுக்கு ராகு பகவான் 7 ஆம் இடத்திலும், கேது பகவான் 2 ஆம் இடத்திலும் இருப்பதால் கடன் தொல்லைகள் ஓரளவு குறையும். மேலும் உடல் சார்ந்த கோளாறுகள் ஓரளவு சரியாகும்.

வீடு வாங்குதல், வண்டி, வாகனங்கள் வாங்கும் விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்விகச் சொத்துகளை பல ஆண்டு பிரச்சினைக்குப் பின் மீட்பீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.