கன்னி குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் கன்னி ராசிக்கு 8 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார்.

கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்தவரை உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் மன அழுத்தத்தைக் கொடுக்கும்; மருத்துவரீதியான விரயச் செலவுகள் ஏற்படும். சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவோர்களுடனான நட்பைத் துண்டித்தல் வேண்டும்.

திடீர் உணர்ச்சிவசப் பேச்சால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும். எதிரிகள் குறித்த விஷயங்களில் இருந்த பதட்டங்கள் குறையும்.

வீடு வாங்குதல், மனை வாங்குதல் போன்ற விஷயங்கள்ரீதியாக கடன்களை வாங்குவீர்கள். தைரியமாக முன்னோக்கிச் செல்வீர்கள். வேலை மாற்றம், தொழில் அபிவிருத்தி, வீடு மாற்றம் என வாழ்க்கையில் பல ஏற்றம் தரும் மாற்றங்களைக் காண்பீர்கள்.

சகோதரர்களுடனான வாக்குவாதங்கள் பெரும் பிரச்சினைக்கு இட்டுச் செல்லும். அஷ்டமத்தில் இருக்கும் குரு பகவானால் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

எந்தவொரு விஷயத்திலும் வாக்கினைக் கொடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்தல் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த தாய்வழி உறவினர்கள் மீண்டும் ஒன்று சேர்வர்.

எதிரிகள் விஷயத்தினைக் கையாளும்போது கோபத்துடன் கையாளாமல் நிதானித்துச் செயல்படுதல் வேண்டும்.

வண்டி, வாகனங்களில் இரவு நேரப் பயணங்கள் மேற்கொள்வதை முடிந்தளவு தவிர்க்கவும். புதிதாக வண்டி வாகனங்கள் வாங்க நினைப்போர் சொந்தப் பெயரில் வண்டி வாங்காமல் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்குதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.