இவங்க ரெண்டு பேருமே த்ரில்லர் பார்ட்டி தான்… கங்கனாவுடன், விஜய் சேதுபதி இணையும் முதல் படம்!

தமிழில் கங்கனா ரனாவத் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெயம் ரவி, லெட்சுமி ராய், ஜெயராம் நடித்திருந்த இந்த படத்தை மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கி இருந்தார்.

‘தாம் தூம்’ல் கங்கனா ரசிக்கப்பட்டாலும், அவருக்கு தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஹிந்தி சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார். ஃபேஷன், ரீவால்வர் ராணி, தானு வெட்ஸ் மானு, மணிகார்னிகா போன்ற படங்கள் கங்கனாவை ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகை அந்தஸ்தத்தை கொடுத்தது.

‘தாம் தூம்’ படத்திற்கு பிறகு தமிழில் கங்கனா நடித்த படம் ‘தலைவி’. முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான ‘தலைவி’ படத்தில், ஜெயலலிதா அவர்களை உருவத்தை பிரதிபலிக்க கூடிய கங்கனாவை தேர்ந்தெடுத்தார் இயக்குனர் ஏ.எல் விஜய். படம் நல்ல பாஸிட்டிவ் விமர்சனத்தை பெற்றது. அதன் பின் தற்போது வெளியாகி இருக்கும் ‘சந்திரமுகி-2’ல் நடித்திருக்கிறார் கங்கனா ரானாவத்.

ஹிந்தியிலிருந்து தமிழுக்கு வந்து கங்கனா நடித்து கொண்டிருப்பது போல, தமிழிலிருந்து பிற மொழி படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அவர் தற்போது ஹிந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜின் ‘மாநாகரம்’ ஹிந்தியில் ரீமேக் ஆனது. அந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

ஷாகித் கபூர் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த ஃபார்ஸி சீரிஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். டிசம்பர் மாதம் காத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடித்திருக்கும் ‘Merry Christmas’ திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய்சேதுபதி கங்கனா ரானாவத் உடன் இணைந்து த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெயிட்டான ரோல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பவர்கள் விஜய் சேதுபதியும், கங்கனா ரானாவத்தும். அப்படிப்பட்ட இருவர் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.