சகல செல்வ யோகம் பெற கந்த சஷ்டியை நிறைவு செய்யும் வழிபாடு இதுதான்…!

கந்த சஷ்டியை பலரும் 6வது நாள் வழிபாடுடன் நிறைவு செய்துவிடுவர். அது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.

7ம் நாள் திருக்கல்யாணம். இந்த திருக்கல்யாணம் இன்று 31.10.2022 (திங்கட்கிழமை) மாலை நடக்கிறது. முருகன்தெய்வானையை மணந்து கொள்கிறார். முந்தைய நாள் சூரனை வதம் செய்ததால் திருமணத்திற்குப் பிறகு தான் அவருக்கு சாந்தம் வரும். அந்த நாளில் நாம் எதை வேண்டினாலும் அப்படியே கிடைக்கும்.

முருகன் சூரனை சம்ஹாரம் செய்துவிட்டு தனது தந்தையை 5 லிங்கங்களை வைத்து வழிபடுகிறார். அநேகமாக மாலையில் திருக்கல்யாணம் நடக்கும். மாலை 6 மணிக்கு மேல் விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

samy

7வது நாள் விக்கிரமாக வைத்தால் அபிஷேகம் வைத்து பூஜிக்கலாம். படங்கள் எனில் நல்ல அலங்காரம் பண்ணி மலர்களால் அரச்சனை செய்து வடை பாயாசத்துடன் முழு சாப்பாட்டுடன் விரதத்தை நிறைவு செய்யலாம்.

கல்யாண சாப்பாடு படைத்தும் வழிபடலாம். இவ்வளவு செய்றதுக்கு வசதி இல்லை எனில் சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், தினைமாவு கொண்டு நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.

தூப தீப ஆராதனைகள், மலர்கள் சாற்றல், சற்கோண கோலமிட்டு 6 நெய் தீபங்கள் ஏற்றி முருகப்பெருமானை உள்ளம் உருக வேண்டுங்கள். முருகா இந்த சஷ்டி விரதம் நிறைவேற எனக்கு அருள்புரிந்தாய். எனக்கு அடுத்த வருஷத்திற்குள் வேலை கிடைக்க வேண்டும்.

Lord Muruga

குழந்தை பிறக்க வேண்டும் என என்ன வேண்டுமோ அதை மனமுருக வேண்டுங்கள். திருப்புகழ் பாடி வழிபாட்டை நிறைவு செய்யலாம். கலசத்தை இனி முறைப்படி எடுங்கள். தேங்காய் நல்லா இருந்தால் வீட்டில் பயன்படுத்தலாம். அரிசியை இன்னொரு நாளில் சர்க்கரைப் பொங்கல் செய்ய பயன்படுத்துங்க.

படத்தை வைத்து பூஜை செய்தால் அதை எங்கிருந்து எடுத்தோமோ அங்கு வைத்து விடுங்க. இன்று சின்ன குழந்தைகளுக்கு தானம் கொடுக்கலாம். சாக்லேட் கூட கொடுக்கலாம். கந்த சஷ்டி கவசத்தைப் படித்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

 

 

Published by
Sankar

Recent Posts