வரலாறு படம்.. காலை மாலை பிளைட் பயணம்.. பறந்து பறந்து வேலை பார்த்த கனல் கண்ணன்..!!

Kanal Kannan: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வரலாறு. அஜித் நடித்து வெளியான இந்த படத்தில் அசின், கனிகா, ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், சுஜாதா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தளபதி 68 திரைப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா! லோகேஷ் ரூட்டில் அப்படியே செல்லும் வெங்கட் பிரபு!

இந்த படத்தில் அஜித் குமார் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இந்த படத்திற்கு ஸ்டாண்ட் இயக்குனர் கனல் கண்ணன் தான் சண்டை காட்சிகளை வடிவமைத்திருப்பார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அஜித் பல படங்களை கையில் வைத்திருந்தார்.

இதனால் படப்பிடிப்பை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வரலாறு படத்தை முடித்த பிறகு தான் மற்ற படங்களில் அஜித் நடிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் படத்தின் இயக்குனரான கே எஸ் ரவிக்குமாரை அழைத்த அஜித்குமார் எத்தனை நாட்களில் படத்தை முடிக்கலாம் என்று கேட்க அவரும் 15 நாட்களாகும் என்று கூறியுள்ளார்.

கைதி திரைப்படம்.. கார்த்தியே கால் பண்ணிட்டார்.. நரேன் பகிர்ந்த தகவல்..!!

இதற்கு அஜித் தன்னால் 15 நாட்கள் தர முடியாது என்றும் ஒரு வாரம் தருகிறேன் அதற்குள்ளாக படத்தை எடுத்து முடியுங்கள் என்று கூறியுள்ளார். கே.எஸ். ரவிக்குமார் எப்படி ஒரு வாரத்தில் எடுப்பது என்று கேட்க இரவு பகல் பாராமல் எடுக்கலாம் என்று கூறிவிட்டாராம்.

அதற்கேற்றார் போல் வரலாறு படத்தின் படப்பிடிப்பு கடைசி ஏழு நாட்கள் இரவு பகல் பாராமல் நடந்துள்ளது. ஆனால் இதில் சண்டை காட்சிகளில் பங்கெடுக்க வேண்டிய கனல் கண்ணன் ஹைதராபாத்தில் காலையில் சூட்டிங் வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளார்.

காமெடிப் படம் தான்.. ஆனா காட்சிக்குக் காட்சி இப்படி ஒரு கருத்தா? 1941-ல் வியக்க வைத்த தமிழ்ப்படம்!

இந்த சமயத்தில் ஏழு நாள் படப்பிடிப்பு உறுதியானதால் கனல் கண்ணன் மாலை நேர flight-ஐ பிடித்து வரலாறு படத்திற்காக வந்துவிட்டு மீண்டும் மறுநாள் காலையில் அடுத்த பிளைட்டை பிடித்து ஹைதராபாத் செல்வாராம். இப்படியே 7 நாளும் கனல் கண்ணன் படப்பிடிப்பில் பங்கு எடுத்துள்ளார். இந்த நிகழ்வை கே எஸ் ரவிக்குமார் அவர்களே பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...