அட்லியுடன் கமல் எடுத்த போட்டோவுக்குப் பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா?

கடந்த வருடம் பான் இந்தியா படமாக ஜவான் என்ற படத்தினைக் கொடுத்து ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையே வாயடைக்க வைத்திருக்கிறார் இயக்குநர் அட்லி. காரணம் ஜவான் படத்தில் வசூல். கிட்டத்தட்ட 1000 கோடியைத் தாண்டி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்தது ஜவான் திரைப்படம்.

இயக்குநர் அட்லி பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சினிமாவில் இயக்குநராகவதற்கு முன் சில குறும்படங்களை இயக்கி பின் ராஜா ராணி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார்.

தனது முதல் படத்தையே விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தினைப் போல் ராஜாராணி உள்ளது என அவர்மீது விமர்சனங்கள் விழத் தொடங்கின. எனினும் படம் 2K கிட்ஸ்களை ஈர்த்தமையால் வெற்றி பெற்றது.

உங்களுக்கு கமல் மாதிரி நடிக்கத் தெரியல.. எந்திரன் ஷூட்டிங்கில் கடுப்பான ரஜினி..

இதனையடுத்து ‘தெறி‘ படத்தில் விஜய்யுடன் இணைந்தார். இந்தப் படமும் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தினைப்போல் இருந்தால் அட்லி மீது ரசிகர்கள் கடுப்பாகினர். இவை எல்லாவற்றையும் விட உச்சமாக மெர்சல் படத்தினை கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் சாயலைப் போல எடுத்ததால் உலகநாயகன் கடுப்பாகி விட்டார்.

பின்பு அட்லியை அழைத்த அவர் தன்னை பாராட்டத்தான் போகிறார் என அட்லி நினைத்துச் செல்ல ஒரே ஒரு புகைப்படத்துடன் அட்லியை அனுப்பியிருக்கிறார். மறுநாள் அந்தப்புகைப்படம் அனைத்து மீடியாக்களிலும் வெளி வந்தது. இந்த இடத்தில் தான் உலகநாயகன் அந்த செயலைச் செய்தார். இயக்குநர் அட்லியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் பின்னால் அபூர்வ சகோதரர்கள் படத்தின் போஸ்டரை வைத்திருந்தார்.

தான் சொல்லாமலேயே மெர்சல் படம் அபூர்வ சகோதரர்களின் காப்பி என்பதை ஒரு புகைப்படத்திலேயே உணர்த்தி அட்லி மீதிருந்த தன்னுடைய கோபத்தினை வெளிப்படுத்தினார். மேலும் விஜயகாந்தும் சத்ரியன் படத்தைப் போலவே தெறி இருப்பதால் அப்போது அட்லியை யார் என்ன என்று கேட்டதாகத் தகவல் உண்டு.

இப்படி தான் இயக்கும் படங்கள் தோறும் மற்ற படங்களின் சாயலை ஒட்டியே அவர் இயக்கி வருவதால் தனியாக கதை எழுதி இயக்கி எப்போது வெற்றியைக் கொடுப்பார் என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...