எந்தக் காலத்துக்கும் பொருந்தும் ‘எத்தனை காலம் தான்..’ பாடலை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தர மறுத்த கவிஞர்.. காரணம் இதான்!

தமிழ் சினிமாவில் அதுவரை சிறிய படங்களில் நடித்துக் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை எம்.ஜி.ஆரை மாஸ் நாயகனாக மாற்றிய படம்தான் மலைக்கள்ளன். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் தான் ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல்.

அன்றும், இன்றும், என்றும் என எக்காலத்திற்கும் பொருந்தும் இப்படி ஒரு பாடலை எம்.ஜி.ஆர் கவிஞரிடம் கேட்டும் அதனை எழுதித் தராமல் சரணத்தை வேறொரு கவிஞரைக் கொண்டு எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
மலைக்கள்ளன் படத்திற்கு நாமக்கல் ராமலிங்கம் கதை திரைக்கதை எழுத, கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். இயக்குநர் ஸ்ரீராமுலு இந்தப் படத்தினை இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கு பாடல் எழுத வந்த கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் ஒரு பாடலின் பல்லவியை எழுதி முடித்து சரணம் எழுத தொடங்கிய போது இயக்குனர் ராமுலுவுடன் பிரச்சனை ஏற்பட கோபித்துக்கொண்டு கவிஞர் வெளியேறி விட்டாராம். அப்போது எம்.ஜி.ஆர் ரூமுக்குச் சென்ற ஒரு சிறுவன் இந்தப் பாடலின் பல்லவியைப் பாட யார் எழுதியது எந்த படத்திற்காக எழுதியது என்று எம்.ஜி.ஆர் விசாரித்திருக்கிறார்.

அப்பாது சிறுவன் கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் – இயக்குனர் இடையேயான பிரச்சனை குறித்துக் கூற, ஆனால் இந்த வரிகளை விட மனமில்லாத எம்.ஜி.ஆர் கவிஞர் தஞ்சை ராமையா தாஸிடம் பாடலை முடித்துத் தரும்படி கேட்டுள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆர் சார்பாக இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவும் கவிஞர் தஞ்சை ராமையா தாஸிடம் பேசியுள்ளார்.

சவப்பெட்டியில் இருந்த நடிகர் அசோகனுக்கு ஜெய்சங்கர் செய்த அந்த செயல்.. அந்த அளவிற்கு இப்படி ஓர் நட்பா?

ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் எம்.ஜி.ஆர் சொல்லியும் இந்த பாடலை எழுதாததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இருந்தாலும் அந்த பாடலை விட மனமில்லாத எம்.ஜி.ஆர் பின்னர் கோவை அய்யா முத்துவை நேரில் சந்தித்து இந்த பாடலுக்கு சரணம் எழுதுமாறு கேட்டுள்ளார்.

அப்படி உருவான பாடல் தான் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…என்ற பாடல். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்தப் பாடலை ஒலிபரப்பாத கட்சிகள் கிடையாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.