அட்லீயுடன் கூட்டணி சேரும் கமல் ஹாசன் – ‘KH235’ !!

’ஜவான்’ மூலம் ஹிந்தி சினிமாவில் அட்லீக்கு கிடைத்த வரவேற்பு மிகப் பெரியது. இயக்குனர் ஷங்கரின் சிஷ்யன் என்பதால், அவரை போலவே பிராம்மாண்ட இயக்குனராக படத்திற்கு படம் மாறிக் கொண்டே வருகிறார் அட்லீ. அந்த வரிசையில் ‘ஜவான்’ பல கோடிகளை வசூல் செய்துள்ளது ‘ஜவான்’.

சமீப காலத்தில் ஷாருக்கானுக்கு இப்படி ஒரு வெற்றியையும், வசூலையும் எந்த படமும் கொடுக்கவில்லை. அதனால் அட்லீ மீது தனிப்பட்ட பிரியம் வந்துள்ளது. அட்லீ இந்த வெற்றியை தொடர்ந்து, அடுத்த படத்தில் யாருடன் இணைய போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஹாலிவுட் படம் ஒன்றை அட்லீ இயக்கப்போவதாக கூறப்படுகிறது. அதன் பின் ஷாருக்கான் மற்றும் விஜய் இருவரையும் ஓரே படத்தில் நடிக்க வைக்கப்பதற்கான முயற்சியில் இருப்பதாக தெரிகிறது. இந்தப்படம் படம் கை கூடினால், ஹாலிவுட் படத்திற்கு பிறகு இயக்குவார் என்று கூறப்படுகிறது.

அதோடு கமலை சந்தித்து அட்லீ பேசியதாகவும் அவருக்கு ஒரு கதையும் சொல்லி இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன. அட்லீ சொல்லிய கதை கமலுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கமல் தற்போது பிக்பாஸ் சீசன் -7 ஐ நடத்தி வருகிறார். மீண்டும் ஷங்கருடன் இணைந்து இந்தியன் -3 படத்தில் நடிக்க போகிறார். மணிரத்தினத்துடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில்,‘KH234’ படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. அட்லீயுடன் கமல் இணையும் படம் ‘KH235’ ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லீ, கமல் காம்போ எப்படி சாத்தியமானது என்று ரசிகர்களுக்கு குழப்பமாகவே இருந்து வருகிறது.

அதற்கு காரணம், விஜய் நடித்து அட்லீ இயக்கிய படம் ‘மெர்சல்’ இந்த படம் வெளியான பின் கமல் அட்லீ மீது கடும் கோபத்தில் இருந்தாக தகவல்கள் வந்தன. அபூர்வ சகோதரர்கள் கதையை அப்படியே காப்பி அடித்து எடுத்துவிட்டதாக கமல் கடுப்பில் இருந்து வந்தார். எப்படி அந்த சம்பவத்தை மறந்து அட்லியின் கதைக்கு ஓகே சொன்னார் என்பது மாயமாகவே இருக்கிறது.  கதையை விட படத்தின் வெற்றிதான் முக்கியம் என நினைத்துவிட்டார் போல உலக நாயகன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews