ரஜினி – கமல் இணைந்து நடித்த கடைசி படம்.. நினைத்தாலே இனிக்கும் ஒரு இசைக்கவிதை!

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படமான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படமே கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த படம் தான் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் நினைத்தாலே இனிக்கும். அதன் பிறகு இருவருமே பேசி வைத்துக் கொண்டு இனி ஒன்றாக நடிப்பதில்லை என்று முடிவு செய்தனர். அதேபோல் தமிழில் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

30 வயதில் ரஜினிக்கு அம்மா.. ரஜினிக்கு அப்போது வயது 32.. கமலா காமேஷின் அறியப்படாத பக்கம்..!

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் எம். எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் ஒரு மியூசிக் திரைப்படம் என்றால் அது மிகையாகாது. இந்த படத்தில் இடம்பெற்ற 14 பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. படத்தின் மிகப்பெரிய பிளஸ்களில் அதுவும் ஒன்று.

சிங்கப்பூர் தொழிலதிபர் மகளான சோனா இந்தியாவுக்கு வரும்போது தனது பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை தொலைத்து விடுவார். இந்த நிலையில் ஒரு கடத்தல்காரன் அவருக்கு உதவ முன் வரும் நிலையில் கடத்தல் தொடர்பான ஒரு வேலையையும் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.

இந்த நிலையில் சந்துருவின் ரசிகையான சோனா சந்துருவை ஹோட்டலில் சந்திக்கிறார். சந்துருதம் சிங்கப்பூர் போவது தெரிந்து கொண்டு அவருடைய கிட்டாரில் ஒரு வைரத்தை அவருக்கு தெரியாமல் வைத்திருந்தார். மறுநாள் சந்துருவின் இசை குழு சிங்கப்பூர் செல்கிறது. ஆனால் சந்துரு கிட்டாரை எடுத்துச் செல்ல மறந்து விடுகிறார்.

சந்துரு பயணம் செய்யும் அதே விமானத்தில் பயணம் செய்யும் சோனா அவருடன் நெருக்கமாக பழகுகிறார். சந்துரு சிங்கப்பூர் சென்றதும், அந்த வைரத்தை எடுத்து கடத்தல்காரனிடம் கொடுக்க வேண்டும் என்பதே அவரது வேலையாக இருந்தது.

இந்த நிலையில் வைரத்தை வைத்திருந்த கிட்டாரை சந்துரு கொண்டு வரவில்லை என்பதை அறிந்து சோனா அதிர்ச்சி அடைகிறார். இதனால் கடத்தல்காரனின் தொல்லை ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சந்துருவை காதலிக்கிறார்.

இந்த நிலையில்தான் அவருக்கு ரத்த புற்று நோய் இருப்பது தெரிய வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் நாம் இறந்து விடுவோம் என்று தெரிந்தும் அவர் சந்துருவை மனதார காதலிக்றார். ஆனால் அந்த காதலை அவரிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

தொழிலதிபரை திருமணம் செய்தவுடன் டார்ச்சர் செய்த பிரபலங்களை வச்சு செஞ்ச சமீரா ரெட்டி..!

இந்த நிலையில் தான் சந்துருவின் இசை குழு இந்தியா திரும்புகிறது. அப்போது இந்தியாவில் சந்துருவை சோனா சந்திக்கும்போது்தான் அவருடைய காதலை சந்துரு தெரிந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி அவருக்கு இருக்கும் ரத்தப் புற்று நோயால் அவர் விரைவில் இறந்து விடுவார் என்பதையும் அறிந்து கொள்கிறார்.

இருப்பினும் தனது அம்மாவின் எதிர்ப்பையும் மீறி சோனாவை சந்துரு திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு இன்னும் சில நாட்கள் தான் உயிரோடு இருக்க போகிறோம் என்பதை அறிந்த சோனா சந்துரு இசைக் குழுவில் சேர்ந்து ஊர் உருவாக பயணம் செய்கிறார். அப்போது ஒரு இசை நிகழ்ச்சியின்போது அவர் இறந்து விடுகிறார்.

இந்த படத்தில் சந்துரு கேரக்டரில் கமல்ஹாசனும், சோனா கேரக்டரில் ஜெயப்ரதாவும் நடித்திருந்தனர். ரஜினிகாந்த், சந்துருவின் இசைக்குழுவில் உள்ள ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூரில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் சிங்கப்பூரின் அழகிய இடங்கள் அந்த காலத்திலேயே படமாக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஜாதாவின் கதையில் உருவான இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி பாலச்சந்தர் இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியானது.

ஒரே ஒரு ஒன்லைன் கதை.. அபார திரைக்கதையால் பாக்யராஜின் சூப்பர் ஹிட் படம்..!

இந்த படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ரொமான்ஸ் கதை அம்சம் கொண்டதால் அந்த கால இளைஞர்கள் இந்த படத்தை கொண்டாடினர். இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் பெரிய ஊடகங்கள் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தை தந்தன.

Published by
Bala S

Recent Posts