’உங்க ஊருல கமல்-ரேவதி செத்துருவாங்க.. எங்க ஊருல சாக மாட்டாங்க.. ‘புன்னகை மன்னன்’ படத்தின் குழப்பமான கிளைமாக்ஸ்..!

கமல்ஹாசன் நடிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘புன்னகை மன்னன்’ என்ற திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சில ஊர்களில் கமல் – ரேவதி இறுதியில் இறந்து விடுவது போன்றும் சில ஊர்களில் உயிர் தப்பி விடுவது போன்றும் திரையிடப்பட்டதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

காதல் தோல்வியால் காதலர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று ஏராளமான படங்கள் வெளியாகி மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. கமல்ஹாசன்கூட ‘மரோசரித்திரா’, ‘ஏக் துஜே கேலியே’ ஆகிய படங்களில் காதலியுடன் தற்கொலை செய்துகொள்வது போன்று நடித்து இருப்பார்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இந்த நிலையில் காதலன், காதலி தற்கொலை செய்ய முயற்சி செய்யும்போது அதில் ஒருவர் மட்டும் பிழைத்துக் கொண்டால் என்ன ஆகும் என்ற பாலச்சந்தரின் கற்பனையில் உருவானதுதான் ‘புன்னகை மன்னன்’. ஏழையான கமல் மற்றும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ரேகா ஆகிய இருவரும் காதலிப்பார்கள். இருவரையும் ஒன்று சேர விடாமல் பெற்றோர் தடுக்க, வாழ்வில்தான் ஒன்று சேர முடியவில்லை, சாவில் ஒன்று சேர்வோம் என்று ஒரு அருவியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பார்கள்.

punnagai mannan3

அப்போது ரேகா இறந்துவிட, கமல் மட்டும் ஒரு மரத்தில் மாட்டி தொங்கிக்கொண்டு உயிர் தப்பி விடுவார். இதனை அடுத்து ரேகாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் கமல்ஹாசன் அதே அருவியில் ரேவதி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வதை பார்த்து தடுப்பார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்படும் காதல், மோதல் இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் சாப்ளின் செல்லப்பா என்ற கேரக்டரிலும் கமல்ஹாசன் நடித்திருப்பார். அந்த கேரக்டர் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத அளவுக்கு வித்தியாசமாக இருந்தது. மேலும் இந்த படத்தின் ஒரே ஒரு காட்சியில் சாப்ளின் செல்லப்பா குட்டையான தோற்றத்தில் வருவார். அதுதான் பின்னாளில் அபூர்வ சகோதரர்கள் படம் எடுக்க கமல்ஹாசனுக்கு ஒரு தைரியத்தை கொடுத்தது.

punnagai mannan2 scaled

புன்னகை மன்னன் படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். என்ன சத்தம் இந்த நேரம், ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், வான் மேகம் பூவாய் தூவும், கால காலமாக வாழும், கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம், சிங்களத்து சின்னக்குயிலே ஆகிய சூப்பர் ஹிட் பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்று இருந்தன. இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.

மேலும் இந்த படத்தில் தான் முதல் முதலாக இளையராஜா கம்ப்யூட்டர் இசையை பயன்படுத்தினார். இந்த இசைக்காக ஏ.ஆர்.ரகுமான், இந்தப் படத்தில் இளையராஜாவிடம் வேலை பார்த்தார். மேலும் இயக்குனர்கள் வசந்த், சுரேஷ் கிருஷ்ணா, எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தனர்.

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

இந்த படம் 1986ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளியான நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பல நகரங்களில் 100 நாட்களுக்கு மேலாகவும் ஓடியது என்பது. இந்த படத்தின் கிளைமாக்ஸ்தான் ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

punnagai mannan1

கமல்ஹாசன் மற்றும் ரேவதி ஆகிய இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும்போது அந்த காரில் வைக்கப்பட்டிருந்த பாம் வெடித்து இருவரும் இறந்து விடுவது போல்தான் பெரும்பாலான திரையரங்குகளில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் இருந்தது. ஆனால் ஒரு சில நகரங்களில் மட்டும் இந்த கிளைமாக்ஸை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இருவரும் தப்பித்து விடுவார்கள் என்பது போன்ற கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?

பல ரசிகர்கள் உங்கள் ஊரில் கமல் – ரேவதி செத்து விடுவார், ஆனால் எங்கள் ஊரில் சாக மாட்டார் என்று கூறிக் கொண்டதாக அப்போது பத்திரிகைகளில் செய்தி வெளியானது. மொத்தத்தில் கமல்ஹாசன் – பாலச்சந்தர் கூட்டணியில் உருவான ஒரு மிகப்பெரிய வெற்றி படம்தான் ‘புன்னகை மன்னன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...