7ம் அறிவு ஸ்டைலில் கமல்ஹாசனின் தக் லைஃப்!.. மேட் மேக்ஸ் எஃபெக்ட்டா இருக்கே!..

உலகநாயகன் கமல்ஹாசனின் 69-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிமுக டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியானது.

சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் அறிமுக டீசர் வெளியான நிலையில், அதில் இடம் பெற்ற அனிருத்தின் இசை சிறப்பாக இல்லை என அதிகப்படியான ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.

கமல்ஹாசனின் தக் லைஃப்

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள கமல்ஹாசனின் 234 வது படத்தின் அறிமுக டீசரில் இடம்பெற்றுள்ள இசையை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வர காரணம் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தான்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்டமாக கமல்ஹாசன், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு தக் லைஃப் என்கிற தலைப்பை மணிரத்னம் வைத்துள்ளார். இந்த படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் எனும் கதாபாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். நாயகன் படத்தில் கமல் வேலு நாயக்கராக நடித்த நிலையில், நாயகன் மீண்டும் வரான் என்பதை ரீக்ரியேட் செய்ய உள்ளார் மணிரத்னம்.

மணிரத்னத்தின் சம்பவம்

அக்னி நட்சத்திரம், ரோஜா, நாயகன், தளபதி, கன்னத்தில் முத்தமிட்டாள், அஞ்சலி, அலைபாயுதே, ஆயுத எழுத்து, குரு, கடல், ஓகே கண்மணி, செக்க சிவந்த வானம், பொன்னியின் செல்வன் என எப்போதுமே மணிரத்னம் படங்களில் தமிழில் தலைப்புகள் இடம்பெற்று வந்த நிலையில், தக் லைஃப் என ஆங்கிலத்தில் தலைப்பைக் கொண்டு பான் இந்தியா படமாக கமல்ஹாசனின் 234 வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளது ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகின் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அறிமுக டீசரில் உலகநாயகன் கமல்ஹாசன் புழுதி படர்ந்த ஒரு இடத்தில் தன்னைத் தாக்க வரும் எதிரிகளை ஏழாம் அறிவு போதி தர்மர் ஸ்டைலில் அடித்து நொறுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்துல அவர் ஒரு மோசமான கேங்ஸ்டராக நடித்துள்ளார். தக்ஸ் என்றாலே திருடர்கள் என்று தான் அர்த்தம். தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் எனும் படத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கி இருந்தார்.

ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தை காப்பி அடித்து எடுத்தது போல உருவாக்கிய நிலையில் படுதோல்வியை சந்தித்தது.

மல்டி ஸ்டார்கள்

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா இணைந்துள்ளனர். ஓகே கண்மணி படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் இணைந்துள்ளார்.

அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இந்தியன் 2, கமல் 233, இந்தியன் 3, கல்கி உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளநிலையில் தக் லைஃப் திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகுமா அல்லது 2025 இல் வெளியாகுமா என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...