நடிகை ஜெயலலிதாவிற்கு நடன இயக்குனராக இருந்து அவருடன் ஜோடி போட்டு ஆடிய உலகநாயகன் கமல்!

உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்தடுத்து பல படங்களின் தோல்விக்கு பின்பு கம்பேக் கொடுத்த திரைப்படம் தான் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. உலக அளவில் பிரமாண்டமாக வெளியான இந்த திரைப்படம் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து கமல் நடிப்பில் அதிக வசூல் சாதனை செய்த படங்களின் லிஸ்டில் இணைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து கமல் அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளார். தற்போது கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்களை மகிழ்வித்து வருகிறார். நூறு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அவர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் கல்கி திரைப்படத்தில் கமல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அதைத்தொடர்ந்து கமல் எச் வினோத்துடன் இணைந்து தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவர் ராணுவ வீரன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தொடர்ச்சியாக கமல் மீண்டும் ஒரு பிரம்மாண்ட கூட்டணியான மணிரத்தினம் இயக்கத்தில் தனது 234 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கமலுடன் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ளதாகவும் ஹீரோயின் ஆக திரிஷா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் இரண்டு கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சமீபத்திய தகவல் கிடைத்தது. அந்த கதாநாயகிகள் பீஸ்ட் புகழ் பூஜா ஹெக்டே மற்றும் விருமாண்டி படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்த அபிராமி இவர்கள் பெயர் பட்டியலும் இந்த படத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோயின்களுடன் கமல் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் கமலின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் அவர் நடிகை ஜெயலலிதாவுடன் இணைந்து ஒரு பாடல் காட்சிக்கு நடனம் ஆடியது தான். அது என்ன திரைப்படம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் அஜித்தை போல ரியல் ஹீரோவாக மாறிவரும் அஜித் மகன் ஆத்விக்!

1974 ஆம் ஆண்டு எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அன்பு தங்கை. இந்த திரைப்படத்தில் முத்துராமன் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை ஜெயலலிதா நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் மன்னர்கள் வணங்குகிற எனும் பாடலில் தான் நடிகை ஜெயலலிதா மற்றும் கமல்ஹாசன் அவர்கள் இணைந்து நடனமாடியிருப்பார்கள்.

இந்த பாடலில் கமல்ஹாசன் புத்தர் வேடத்தில் இருக்க ஜெயலலிதா அவரை காதலிக்கும் பெண்ணாக சுற்றி நடனமாடி இருப்பார். மேலும் இந்த பாடலுக்கு நடன ஆசிரியராக இருந்ததும் கமல் தான். நடிகை ஜெயலலிதாவிற்கு நடனத்தை கற்றுக் கொடுத்து அவருடன் சேர்ந்து ஆடிய பெருமை கமலுக்கும் கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...