இளம் நடிகர்கள், இயக்குனர்களுடன் கமல் கூட்டணி…! வெற்றியை வாரிக் குவிக்கச் செய்யும் யுக்தியா?

கமல்ஹாசனுக்கு வயது ஏறிக்கொண்டே போனாலும் அவரது இளமைக்குக் காரணம் புதுமை தான். அதென்ன ஒரே குழப்பமா இருக்கு என்கிறீர்களா? புதுமையாக எப்போதும் சிந்தித்துக் கொண்டும், செயலாற்றிக் கொண்டும் இருந்தாலே அது இளமை தானே.

அப்போது எத்தனை வயசானாலும் சரி. நீங்கள் எப்போதும் இளமையாகவே இருப்பீர்கள். அதனால் தான் தற்போது தான் நடிக்கும் படங்களில் கூட இளம் நட்சத்திரங்களை நடிக்க வைக்கிறார்.

அப்படிப்பட்ட படங்கள் பெரும்பாலானவை வெற்றியே. கமலைப் பொருத்த மட்டில் தோல்வி என்றாலும் அதை வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றி விடுவார். தோல்வியால் துவண்டு விழுந்து விட மாட்டார். இப்போது அந்த சில படங்களைப் பற்றி பார்க்கலாம்.

அன்பேசிவம், நளதமயந்தி

கமல் மாதவன் கூட்டணியில் அன்பே சிவம், நளதமயந்தி போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. 2003ல் சுந்தர்.சி. இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் உருவான படம். இந்தப் படத்திற்கு கதை எழுதியவர் கமல்ஹாசன். இந்தப் படத்தில் கமலும், மாதவனும் உரையாடிக் கொண்டே இருப்பார்கள். 

இருவரும் வெவ்வேறு கோணங்களில் சிந்திப்பவர்கள். ஒருவரும் முதலாளித்துவமாகவும், மற்றொருவர் தொழிலாளித்துவமாகவும் சிந்திப்பவர். இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் மதன். கமலுக்கு ஜோடியாக கிரண் நடித்துள்ளார்.

படம் வெளியான புதிதில் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் இந்தப் படம் இப்போதும் கமலின் டாப் 10 படங்களுள் ஒன்றாக இருக்கிறது. லேட் பிக் அப் என்று சொல்வார்களே அது போல தான் இந்தப் படமும். இப்போதும் இந்தப் படத்தை நெட்டில் தேடித் தேடி பார்த்து வருகிறார்கள்.

ஹேராம்

Heyram

கமல் தனது சொந்தத் தயாரிப்பில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த படம் ஹேராம். இந்தப் படத்தை எழுதி இயக்கியவரும் கமல் தான். 2000ல் வெளியான இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா.

ஹேமமாலினியும், ராணி முகர்ஜியும் படத்தில் நடித்துள்ளனர். இந்தியப்பிரிவினையையும், நாதுராம் கோட்சேவால் காந்தியின் படுகொலையையும் சித்தரிக்கும் படம்.

விக்ரம் 2

Kamal VS

2022ல் கமல், விஜய் சேதுபதி இணைந்து மிரட்டிய விக்ரம் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானது. அனிருத் ரவிச்சந்திரன் இசையில் பாடல்கள் சூப்பர். வசூலில் படம் ரூ.450 கோடியைத் தாண்டி சாதனை படைத்தது.

இந்தியன் 2

Kamal, Siddarth

1996ல் வெளியான இந்தியன் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து கமல், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் விறுவிறுப்பாகத் தயாராகி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தில் இளம் நட்சத்திரம் சித்தார்த் கமலுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

முதல் பாகம் ஊழலை மையமாகக் கொண்டு வெற்றி பெற்றதால் 2ம் பாகத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

எஸ்டிஆர் 48

Kamal, STR

கமல் தயாரிக்கும் படத்தில் எஸ்டிஆர் என்று அழைக்கப்படும் நடிகர் சிம்பு பட்டையைக் கிளப்புகிறார். இது சிம்புவுக்கு 48வது படம். எப்போதும் ரஜினி தான் தலைவர் என்று சொல்லும் சிம்புவுக்கு கமல் வாய்ப்பு கொடுத்து அவரது சொந்த படத்திலேயே நடிக்க வைத்து இருப்பது சிம்புவுக்கே ஆச்சரியம் தரும் விஷயம் தான்.

கமல் தயாரிப்பில் இது 56வது படம். கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தின் டைரக்டர் தேசிங்கு பெரியசாமி தான் இந்தப் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கான மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. விக்ரம், இந்தியன் 2 படங்களுக்கான இசை அமைப்பாளர் அனிருத் தான் இந்தப் படத்தின் இசை அமைப்பாளர்.

தொடர்ந்து இதர நட்சத்திரங்களைப் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதை அடுத்து கமல் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். இது அவருக்கு 234வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Published by
Sankar

Recent Posts