கல்கி பிரபாஸ் படம்… கமல் ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்க்காதீங்க…! பிரபலம் தகவல்

கல்கி 2898 AD படத்தோட டிரெய்லர் விட்டதுல இருந்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் கமல் படத்தில் ஒரு சில காட்சிகளில் வருவதால் அவருடைய ரசிகர்கள் படத்தை பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். முதலில் வில்லன் என்றார்கள். இப்போ அப்படி இல்லை. அவர் அதையும் தாண்டி வேற லெவல் என்கிறார். இங்கு மூத்த பத்திரிகையாளர் பரத் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

கல்கியில் பிரபாஸ், கமல், அமிதாப்பச்சன், பசுபதி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்காக புஜ்ஜி என்ற வண்டியை லாஞ்ச் பண்றதுக்கு ஹைதராபாத்துக்குப் போயிருந்தோம். பிரபாஸே அந்த புஜ்ஜியைப் பார்த்தோம். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது.

Kalki1
Kalki1

ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அங்கு அவருடைய ரசிகர்கள் அதிகமாக இருந்தார்கள். இதற்கு முன் ஆதிபுருஷ் படத்துக்கு திருப்பதில ஆடியோ லாஞ்ச் நடந்தது. நம்ப மாட்டீங்க. 6 கிலோமீட்டருக்கு உள்ளே போக முடியல. அவ்வளவு கூட்டம்.

கட்டியிருக்கிற கட்டையை எல்லாம் உடைச்சிக்கிட்டு உள்ளே போறாங்க. போலீஸ் எல்லாம் தள்ளிட்டுப் போயிட்டாங்க. உள்ளே இருக்குறவங்களையும் காண்டக்ட் பண்ண முடியல. இனி இங்க இருந்தா உயிருக்கே ஆபத்துன்னு அப்படியே திரும்பி வந்தோம். அந்த வகையில அவருக்கான ரசிகர்கள் அதிகம். எதிர்பார்ப்பும் பெரிசு.

அந்த வகையில் இது 600 கோடிக்கு மேல பட்ஜெட் கொண்ட படம். கமலுக்கு ஏலியன் லுக் கொடுக்குற கேரக்டர் மாதிரி இருக்குது. படத்துல அவரு திருப்புமுனையா வர்றாரு. நெகடிவ் ரோல்னு சொன்னாங்க. ஆனா அவரு புது பிரபஞ்சம் காத்துக்கிட்டு இருக்குன்னு சொன்னா ஒரு பாசிடிவ்வா பேசுறதனால அவர் வில்லனா இருக்காது.

கமல் ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம். அவரே பத்து நிமிஷம் தான் டப்பிங் பேசியிருக்காரு. இது பிரபாஸ் படம். இன்னிக்கு இருக்கிற பிசி ஷெடுல்ல கமல் இன்னொரு படத்துல போயி ரொம்ப பெரிய கேரக்டர்ல நடிக்க மாட்டாரு. இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.

கல்கி படத்தைப் பொருத்தவரை இன்று சமூக வலைதளங்களும், மீடியாக்களும் கமல் மீதான ஹைப்பை அதிகரித்து வருகின்றன. ஒரு மீடியாவில் கமலின் நடிப்பைப் பார்த்துவிட்டு இயக்குனர் நாக் அஸ்வினே மிரண்டு விட்டார் என்கிறார்கள்.

Kamal
Kamal

அதே நேரம் கமல், அமிதாப்பச்சனை எல்லாம் கையாள்வது பற்றி பலரும் பல கருத்துகளை சொன்னார்கள். ஆனால் அப்படி அல்ல. இவர்கள் இன்னும் தன்னை இயக்குனர்கள் இயக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரம் ஒரு முறை நடித்தது சரியா, திரும்ப நடிக்கவா என்றெல்லாம் கூட கமல் இறங்கி கேட்டு நடிச்சிக் காட்டுகிறாராம்.

இவர் இருக்குற லெவலுக்கு இப்படி எல்லாமா கேட்கிறார் என மொத்த யூனிட்டும் ஆச்சரியப்படுகிறதாம். கமல் படத்தைப் பொருத்தவரையில் படம் வருவதற்கு முன்பு அதிகமா எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அதன்பிறகு ஒன்றும் இருக்காது என்றும் சிலர் கூறி வருகின்றனர். எது எப்படியோ வரும் 27ம் தேதி வந்தால் படத்தோட ரிசல்ட் தெரிந்து விடும். அது வரை பொறுத்திருப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews