எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் தெய்வம் போல் வந்து உதவி செய்தது இவர்தான்… பொன்னம்பலம் எமோஷனல்…

பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் பணியாற்றிய ஸ்டண்ட் மேன் மற்றும் வில்லன் நடிகரும் ஆவார். 90களில் முரண்பாடான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் பொன்னம்பலம்.

1989 ஆம் ஆண்டு ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பொன்னம்பலம். ஸ்டண்ட் மேனாகவும், நடிகராகவும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த பொன்னம்பலத்திற்கு 1993 ஆம் ஆண்டு ‘வால்டர் வெற்றிவேல்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பின்னர் 90களில் பல முக்கிய திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தார் பொன்னம்பலம். ‘நாட்டாமை’, ‘முத்து’, ‘அமர்க்களம்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானார் பொன்னம்பலம். ‘முதல் எச்சரிக்கை’, ‘அம்மையப்பா’ போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார் பொன்னம்பலம்.

எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் வியக்கத்தக்க வகையில் நடிப்பதற்காகவும், பெரிய தோற்றம், வில்லத்தனமான முகம், அபாரமான நடிப்பு ஆகியவற்றிற்காக பாராட்டைப் பெற்றவர். 2004 இல் ‘பட்டய கெளப்பு’ என்ற படத்தை தயாரித்து இயக்க தொடங்கினர் பொன்னம்பலம். சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. இது தவிர விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராக பொன்னம்பலம் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில காலங்களாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்தார் பொன்னம்பலம். உடல் தேறி தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட பொன்னம்பலம் தான் பட்ட கஷ்டங்களையும், உதவியவர்களையும் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், எனக்கு உடம்பு ரொம்ப முடியாம போய்டுச்சு, சிகிச்சைக்கு காசு இல்லை. அப்போ தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அவர்களுக்கு போன் பண்ணி உதவி கேப்போம் எதோ ஒரு லட்சம் தருவார் சிகிச்சை பண்லாம்னு நெனச்சு அவர்கிட்ட கேட்டேன். ஆனால் தெய்வம் போல என் முழு சிகிச்சை செலவு கிட்டத்தட்ட 40 லட்சம் வரை செலவு பண்ணி என்னை காப்பாற்றிவிட்டார் சிரஞ்சீவி என்று எமோஷனலாக பேசியுள்ளார் பொன்னம்பலம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews