நம்ம லெஜண்ட் அண்ணாச்சியா இது..? அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட Legend சரவணன்

தமிழகத்தில் சில்லரை வர்த்தக நிறுவனத்தின் சக்கரவர்த்தியாக விளங்கிக் கொண்டிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் சரவணன் அண்ணாச்சியைத் தெரியாதவர்களே கிடையாது. சிறு குழந்தை கூட எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ பாடலைக் கேட்டு வளர்ந்தது.

அந்த அளவிற்கு வர்த்தகத்தில் தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய சரவணன், தன்னுடைய ஷோரூமின் விளம்ரபங்களுக்கு தானே மாடலாகத் தோன்றி நடித்தார். ஆரம்பத்தில் இதனை டிரோல் செய்தவர்கள் ஏராளம். ஆனால் அதையெல்லாம் பற்றி கவலைப்படாத அண்ணாச்சி ஹன்சிகா, தமன்னா ஜோடி சேர்ந்து அடுத்தடுத்து விளம்பரங்களில் நடிக்க உச்ச ஸ்டார்களே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு கெத்து காட்டினார்.

அதன்பின் இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ல் வெளிவந்த லிஜண்ட் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார் சரவணன். அதன்பின் இவரை சினிமா வட்டாரத்திலும், பொது வெளியிலும் லிஜண்ட் சரவாண என்று அழைக்கத் தொடங்கினர்.

விமர்சனங்களைக் பற்றிக் கவலைப்படாமல் தான் மேற்கொண்ட முயற்சியைக் கைவிடாமல் லிஜண்ட் படத்தில் நடித்து முடிக்க படம் பார்த்தவர்கள் பல கலவையான விமர்சனங்களைக் கூறினர். இதனையடுத்து பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் லிஜண்ட் சரவணாவை நடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். மேலும் சரவணாவும் ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.
சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான ஏழு கடல் ஏழு மலை திரைப்படம்.. இயக்குநர் ராமுக்கு கிடைத்த அங்கீகாரம்

தற்போது அந்த வாய்ப்பு வந்திருக்கிறது. எதிர்நீச்சல், கருடன், காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் லிஜண்ட் சரவணா நடிக்கும் அடுத்த படத்தினை இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை லிஜண்ட் சரவணா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். துரை செந்தில் குமார் சொன்ன கதை லிஜண்ட் சரவணா அண்ணாச்சிக்குப் பிடித்துப் போக இருவரும் இணைகின்றனர்.

தற்போது பிஸினஸில் கவனம் செலுத்தி வரும் லிஜண்ட் சரவணா அண்ணாச்சி விரைவில் ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் இணையும் மற்ற கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews