செய்திகள்

மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு.. கூடுதல் விவரங்கள்.!

தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை என்ற திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த திட்டத்தின் படி செப்டம்பர் 15ஆம் தேதி 1.06 கோடி மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற திட்டத்தின் பலனை அளித்தது என்பதும் அதன் படி அனைத்து மகளிர்களின் வங்கி கணக்கிற்கும் ஆயிரம் ரூபாய் அனுப்பப்பட்டது என்றும் செய்திகள் வெளியானது.

ஆனால் இந்த திட்டத்தில் விண்ணப்பம் அளித்த ஏராளமான மகளிர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதனை அடுத்து அவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் இசேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி அதற்கென https://kmut.tn.gov.in என்ற இணையதளமும் அறிவிக்கப்பட்டது என்றும் இந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொண்டு மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த இணையதளத்தில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் மேல்முறையீடு செய்வதற்காக இணையதளம் சென்றதால் இணையதளம் முடங்கியதாகவும் கூறப்பட்டது. இதனால் பலரும் மேல்முறையீடு செய்ய முடியாமல் சிரமம் அடைந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து தற்போது அந்த இணையதளம் பராமரிப்பில் இருப்பதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இணையதளம் மட்டும் இன்றி நேரிலும் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இ சேவை மையத்திற்கு சென்று ரேஷன் கார்டு எண்ணை மட்டும் கூறினால் உடனடியாக, எதற்காக மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று தகவல் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இ சேவை மையங்களில் ஏராளமான பெண்கள் காத்திருந்த நிலையில் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு குடும்ப அட்டை எண்ணை கேட்டு நிராகரிக்கப்பட்ட காரணத்தை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். சிலர் தனக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்று குறுஞ்செய்தி வந்திருப்பதாகவும் ஆனால் பணம் மட்டும் வரவில்லை என்றும் கூறியதாகவும் அவர்களது குடும்ப அட்டை என்னை தனியாக இசேவை அதிகாரிகள் குறித்து வைத்த கொண்டதாகவும் விரைவில் அவர்களுக்கு பணம் வரும் என்று கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஒரு சிலர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பதால் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்யும் சிலர் தங்களது தாயார் அல்லது மனைவியின் செல்போனை இணைத்துள்ளதால் அவர்கள் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதாக கருதப்பட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தகவலும் தெரியவந்தது.

ஒரு பெண் தான் ஏழை என்று விண்ணப்பம் செய்ததாகவும் ஆனால் அவரது குடும்ப அட்டை எண்ணை ஆய்வு செய்தபோது அவரது கணவர் பெயரில் கார் இருப்பது தெரிந்ததால் மனு நிராகரிக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது. இந்த பிரச்சனையை சந்தித்த ஒரு பெண் தனது கணவர் இறந்து விட்டார், காரையும் விட்டுவிட்டோம், அதனால் எங்களுக்கு வருமானம் இல்லை என்று கூறிய போது பொறுமையாக அதைக் கேட்ட அதிகாரிகள் மீண்டும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாங்கிக் கொண்டதாகவும் தெரிகிறது.

வீட்டில் உள்ளவர்கள் வாகனம் வைத்திருந்தாலோ அல்லது வீட்டில் உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்திருந்தாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று ஏற்கனவே விதிமுறைகளில் கூறியிருந்தும், அந்த விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் விண்ணப்பம் செய்தவர்களுக்கு தான் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் உண்மையாகவே விதிமுறைகளை கடைப்பிடித்தவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தகுதியான ஒரு பயனாளி கூட விடுபடக்கூடாது என்ற தமிழக முதல்வர் முஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மேல்முறையீடு செய்ய வருபவர்களிடம் பொறுமையாக அவர்களிடம் விவரங்களை பெற்று விண்ணப்பங்களை வழங்கி பதிவு செய்து வருவதாகவும் அதன் பிறகு கள ஆய்வு நடத்தி அவர்களது விபரங்களை பரிசீலனை செய்து உண்மையாகவே ஆயிரம் ரூபாய் பெற தகுதியானவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு விருது செய்துள்ளது.

எனவே கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படி தகுதியுடைய பெண்கள் அனைவருக்கும் கண்டிப்பாக ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் ஆனால் அந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை மீறி இருந்தால் கூட பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Published by
Bala S

Recent Posts