காஜலின் பள்ளிப்பருவ புகைப்படம்… ரசிகர்களுக்கு அவர் வைத்த டெஸ்ட்!!

விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியினை வேறு லெவலுக்கு கொண்டு சென்ற நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ்  ஆகும். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடனக் கலைஞர் சாண்டி.

இவர் நடனக் கலைஞர் என்பதைத் தாண்டி, சிறந்த பொழுதுபோக்காளர் என்றும்கூட சொல்லலாம். உள்ளே இருந்த போட்டியாளர்கள் மட்டுமின்றி வெளியே இருந்த ரசிகர்களையும் தன்னுடைய பேச்சால் எப்போதும் கலகலப்பாக வைத்திருந்தார்.

51583915667fdce75a75b878ecf299cf

இவருடைய முன்னாள் மனைவி காஜல் பசுபதி ஆவார், இவர் 90ஸ் கிட்ஸின் பேவரைட் சன் மியூசிக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். மேலும் இவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். காஜல் மிகவும் தைரியமானவர் என்பதால், உள்ளதை உள்ளவாறே பேசி டி.ஆர்.பியை எகிறச் செய்வார் என்றே இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் உள்ளே போனவர், எதிர்பார்த்த அளவு எந்த சர்ச்சையையும் சந்திக்கவில்லை. பிக் பாஸ் 3 குறித்து அவ்வப்போது பேட்டி கொடுத்துவரும் காஜல், சாண்டியின் இரண்டாவது மனைவியுடன் நெருங்கிய நட்பு கொண்டவராக இருந்துவருகிறார்.

தற்போது காஜல் இன்ஸ்டாகிராமில் பள்ளி பருவ குரூப் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அவர், “இதில் நான் எங்கு இருக்கிறேன் என்று கண்டுபிடிக்க முடிகிறதா? என்று கேட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் அந்தப் புகைப்படத்தில் அவரைக் கண்டுபிடித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.