காதலர் தினம் பற்றிய சுவாரசிய தகவல்கள் சில..



உலகம் பூராக 35.000.000 இருதயம் வடிவம் கொண்ட சாக்லெட் பெட்டிகள் விற்பனை ஆகின்றன.அமெரிக்காவில் மட்டுமே இதே நாளில் 1.000.000.000 டாலர்களுக்கு சாக்லெட் விற்பனை ஆகின்றது. வேலன்டைன் நாள் அன்று விற்கப்படும் மலர்களில் 73 சதவீதமான மலர்கள் ஆண்களால் வாங்கப் படுகிறது, 27 சதவீதமான மலர்கள் தான் பெண்களால் வாங்கப் படுகிறது. 189.000.000 ரோசாப் பூக்கள் அமெரிக்காவில் மட்டுமே விற்பனை ஆகின்றது. அதே அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை முன்னிட்டு 145.000.000 வாழ்த்து மடல்கள் அனுப்பப் படுகின்றன. அதிகமான வாழ்த்து மடல்களை யார் பெறுகின்றார்கள் என்று தெரியுமா…? அது வேறு யாரும் இல்லை, ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு கொடுக்க வாங்குறாங்க. 3 சதவிகிதத்தினர் அவர்களின் செல்லப் பிராணிக்கு ஓர் வாழ்த்து மடலைக் கொடுக்கின்றார்கள் என்றால் பாருங்க…

அன்பை விதைத்தால், அன்பே விளையும். உலகெங்கிலுமுள்ள கட்டற்ற வன்முறைக்கு அன்பே தீர்வாய் அமையும்.

Published by
Staff

Recent Posts