கடகம் வைகாசி மாத ராசி பலன் 2024!

கடக ராசி அன்பர்களே வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை அனுகூலங்கள் மற்றும் ஏற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். பிள்ளைகளுக்கு தந்தை மூலமும், தந்தைக்குப் பிள்ளைகள் மூலமும் சந்தோஷங்கள் ஏற்படும்.

நீங்கள் கனவு கண்டதைப் போல் தொழில் ரீதியாகவும் சரி, வேலைவாய்ப்பு ரீதியாகவும் சரி ப்ராப்தம் ஏற்படும். அதிலும் குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்ல நட்பு ஏற்படும். மேலும் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கப் பெறும்.

தொழில்ரீதியாக தொழிலை அபிவிருத்தி செய்ய நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த அரசாங்கத்தின் கடனுதவிகள் கிடைக்கப் பெறும். தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.

நீங்கள் வெற்றியாளராக மாறக்கூடிய ப்ராப்தம் உள்ளது. அரசு சார்ந்த காரியங்களில் இதுவரை இழுபறி இருந்துவந்த நிலையில் தற்போது அவை விறுவிறுவென நடந்து முடியும்.

நீங்கள் நினைத்தது நினைத்தபடியே நடக்கும் காலகட்டமாக இது இருக்கும். சகல தோஷ நிவர்த்தியானது கிடைக்கப் பெறும். உங்கள் லக்கினத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிர பகவான் கூட்டணி அமைத்து இட அமர்வு செய்துள்ளனர்.

தலை, நெற்றி போன்ற உறுப்புகளில் கவனமாக இருத்தல் வேண்டும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே தேவையற்ற பிடிவாதங்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதில் பிடிவாதமாக இருங்கள்.

செவ்வாய் நீச்சமடைந்து இருப்பதால் கணவன்- மனைவி இடையே பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் பதவி சார்ந்தோ அல்லது வீடு சார்ந்தோ இட மாற்றங்களைச் செய்வீர்கள்.

மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்து எடுக்கும் முடிவுகளில் குழப்பம் ஏற்படும்; ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கலந்து ஆலோசித்து உங்கள் குழப்பங்களில் இருந்து தெளிவு பெறுங்கள்.

தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் அனைத்து காரியங்களையும் சாதிப்பீர்கள். சந்தோஷம் என்று பார்க்கையில் 70%. பொருளாதார சேர்க்கை என்று பார்க்கையில் 80%.

பத்ரகாளியம்மனைத் தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் ஏற்றங்கள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews