கடகம் புரட்டாசி மாத ராசி பலன் 2022!

கடக இராசியின்மீது குரு பகவானின் பார்வை விழுவதால் கௌரவம், புகழ், செல்வாக்கு என சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், 2 ஆம் இடத்தில் புதன் 15 நாட்களுக்கும் சுக்கிரன் 15 நாட்களுக்கும் இருப்பர், 3 ஆம் இடத்தில் சூரியன், புதன் (இரண்டாம் பாதி 15 நாட்கள்), சுக்கிரன் (இரண்டாம் பாதி 15 நாட்கள்) முக்கூட்டு கிரகங்கள் உள்ளது..

9 ஆம் வீட்டில் குரு பகவான், 10 ஆம் வீட்டில் ராகு, 11 ஆம் வீட்டில் செவ்வாய் பகவான் உள்ளார். கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் ஏற்படும், நண்பர்கள் விரோதிகளாக மாற வாய்ப்புண்டு.

வெளிநாடு செல்ல நினைப்போருக்கு நல்ல செய்தி தேடி வரும், 4 ஆம் இடத்தின் கேதுவும், சனி பகவானின் பார்வையும் வண்டி, வாகனங்களில் செலவுகளை ஏற்படுத்தும்.

மன உளைச்சல்கள் ஏற்படும், வீண் செலவுகள் ஏற்படும். தாயின் உடல் நிலை ரீதியாக செலவுகள் ஏற்படும். வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். செவ்வாய் மற்றும் குரு பார்வை பூர்விக இடங்களில் வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பூர்விகச் சொத்துகள் கிடைக்கப் பெறும். திருமண காரியங்கள் தள்ளிப் போகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப் பெறும்.

புதிதாக தொழில் துவங்குவோருக்கும், தொழில் அபிவிருத்தி செய்வோருக்கும் ஏற்ற மாதமாகும். அசையாச் சொத்துகள்மூலம் வருமானம் கிடைக்கும்.  உடன் பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews