கடகம் மார்கழி மாத ராசி பலன் 2022!

ராசியைக் குருபகவான் பார்க்கிறார். தெளிவான சிந்தனை, செயல்பாடு இருக்கும். சமூகத்தில் பெயர், புகழ், அந்தஸ்து உயரும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பணவரவு இருந்தாலும் செலவு மற்றொருபுறம் அதிகமாகவே இருக்கும். வாக்குரீதியாக சில பிரச்சினைகள் ஏற்படும், அதனால் வாக்குக் கொடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுதல் நல்லது.

உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். 4 ஆம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் பணிச் சுமை அதிகரிக்கும். பொறுமை காத்து வேலை செய்து நற்பெயர் பெறுவீர்கள்.

தாயாருக்கு உடல்நலக் கோளாறு ஏற்படும், மருத்துவரீதியான விரயச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும்; இது மன உளைச்சலை ஏற்படுத்தும்.

வண்டி, வாகனங்கள் ரீதியான செலவுகள் கூடுதலாகவே இருக்கும். 5 ஆம் இடம் செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த வீடாக இருப்பதால், எடுக்கும் முயற்சிகள் வெற்றியினைக் கொடுக்கும். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும்.

பூர்விகச் சொத்துகள் உங்களைத் தேடி வரும், பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். முருகப் பெருமானை வழிபட்டு வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.