கடகம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

9 ஆம் இடத்தில் குரு பகவான், 7 ஆம் இடத்தில் சூர்ய பகவான், 11 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் என கோள்களின் இட அமைவு உள்ளது. 11 ஆம் தேதி சந்திரன் உச்சம் அடைகிறார், சந்திரன்- செவ்வாயின் சேர்க்கை நடைபெறுவதால் சந்திர மங்கள யோகம் கிடைக்கப் பெறும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை சௌகரியமான காலமாக இருக்கும். புது வேலை, பதவி உயர்வு என நீங்கள் புது விஷயங்களுக்கு முயற்சிப்பீர்கள். தொழில்ரீதியாக புதிதாக தொழில் ஆரம்பித்தல், தொழிலை அபிவிருத்தி செய்தல் போன்ற விஷயங்கள் ரீதியாக செலவுகள் ஏற்படும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை உங்களுக்குப் பொருத்தமில்லாத வரன் அல்லது உங்களுக்கு எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யாதது போன்ற வரன்களே கிடைக்கும்.

காதலர்களைப் பொருத்தவரை கருத்து மோதல், சங்கடங்கள், பிரிவு என பலவும் ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை புதன்- சூர்யன் இடப் பெயர்ச்சி அனுகூலமான விஷயங்களை ஏற்படுத்தும் மாதமாக இருக்கும். ஆனால் சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து கல்வி ரீதியாக புதிதாக எடுக்கும் முடிவுகளில் குழப்பங்களை ஏற்படுத்துவார்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை வேலைப் பளு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் ரீதியாக புது மருத்துவம், புது உணவுப் பழக்கம் போன்றவற்றினை முயற்சிக்காமல் இருத்தல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews