ரொமான்டிக் பாட்டை இளையராஜா பாட கலாய்த்து தள்ளிய பாக்யராஜ்.. இசைஞானியையே விமர்சிச்ச தைரியத்தின் பின்னணி..

தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசான் என்ற பெயரெடுத்து வலம் வந்தவர் தான் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ். இப்படி கூட ஒரு திரைக்கதையை அமைக்க முடியுமா என சுமார் 30- 40 ஆண்டுகளுக்கு முன்பாக பாக்யராஜ் உருவாக்கிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று வரையிலும் சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் கூட அவரது படத்தின் திரைக்கதை மற்றும் கதை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஒரு கைடாகவே இருந்து வருகிறது.

பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் மற்றும் இளையராஜா உள்ளிட்ட பல முன்னணி இசை அமைப்பாளர்களுடனும் இணைந்து பணிபுரிந்துள்ள பாக்யராஜ் கடந்த பல ஆண்டுகளாகவே இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டு திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

தனது ஆரம்ப கட்டத்தில் முன்னணி நடிகராகவும் தான் இயக்கும் படங்களிலும் கதாநாயகனாக நடித்து வந்த பாக்யராஜ் தற்போது ஏராளமான காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மட்டும் இல்லாமல் ஹீரோ, ஹீரோயினின் அப்பா கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி மேடை ஒன்றில் இசைஞானி இளையராஜா குறித்து பாக்யராஜ் தெரிவித்த கருத்து ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் ‘விளக்கு வச்ச நேரத்துல’ என ஒரு ரொமான்டிக் பாட்டு சற்று கிளுகிளுப்பு நிறைந்த வகையில் அமைந்திருக்கும்.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் இதன் பாடல் வரிகளை கேட்டுவிட்டு இளையராஜா அதனை மாற்றும் படி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பாடலை இளையராஜா தான் பாடியிருந்தார். இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த பாக்யராஜ், “இது என்ன லிரிக்ஸ். நான் இந்த பாடலை பாட மாட்டேன்’ என இளையராஜா கூறினார். தான் மாலை போட்டிருந்ததாகவும் இது போன்ற வரிகளை பாடமாட்டேன் என்று என்னிடம் கூறினார்.

அப்படி ரெக்கார்டிங்கில் பாடும்போது விளக்கு வச்ச நேரத்துல மாமா வந்து மறைந்து நின்றான் என்ற வரிகளில் விளக்கு வச்ச நேரத்திலே என்று தான் இளையராஜா பாடினார். அடுத்த வரிகளில் இளையராஜா ‘தன்னானனா’ என பாடி மறந்துவிட மீண்டும் ஒருமுறை டேக் போலாம் என கூறியதுடன் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

நான் சொன்ன வரிகளை விட நீங்கள் தன்னானனா என பாடியது இன்னும் அந்த ரொமான்டிக்கை அதிகப்படுத்தியதாக கூறினேன். அதேபோல நான் எதிர்பார்த்ததை விட இது இன்னும் நன்றாக கிளுகிளுப்பு நிறைந்ததாகவும் இருந்ததாக கூற இளையராஜா என்னிடம் மீண்டும் ஒருமுறை நான் பாடுகிறேன் என்று கேட்டார். நானோ நீங்கள் மாலை போட்டிருக்கிறீர்கள், பாட வேண்டாம் இதுவே எனக்கு போதும் என்று நான் சொல்லிவிட்டேன்” என நக்கலாக பாக்யராஜ் கூறி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews