பூவெல்லாம் கேட்டுப்பார்.. ஜோதிகா அழாத நாளே கிடையாதாம்.. இயக்குனர் பகிர்ந்த தகவல்..!!

1999 ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஜோதிகா. அதன் பிறகு கதாநாயகியாக பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி, குஷி உள்ளிட்ட பல படங்களில் ஜோதிகா நடித்துள்ளார்.

சூர்யாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். காக்க காக்க திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த போது அவரை காதலித்த ஜோதிகா 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பில் 2007 ஆம் ஆண்டு மொழி திரைப்படம் வெளியானது.

10 வயசுல நடிக்க வந்த பிரபலம்.. ஆனா நடிச்சது 13 தமிழ் படங்கள் தான்.. தென் இந்திய சினிமாவை கலக்கிய பிரபல நடிகை..

அதன் பிறகு சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட ஜோதிகா 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சில படங்களில் ஜோதிகா நடித்துள்ளார்.

இப்படி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்த ஜோதிகா ஆரம்ப காலகட்டத்தில் ஒரு படத்தில் நடிக்க தினமும் அழுதிருக்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் தான் அவர் கதாநாயகியாக நடித்த படம்.

அஜித் உட்பட ஒரு சில தமிழ் நடிகர்களுக்கு ஜோடி.. பல பிரச்சனைகளை கடந்து சாதித்த நடிகை பாவனா..

இயக்குனர் வசந்த் இயக்கிய இந்த படத்தில் பிரபல நடிகையான நக்மாவின் சகோதரி என்பதால் ஜோதிகாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஜோதிகா சரியாக நடிக்கவில்லை என்று வசந்த் எல்லோரையும் திட்டுவது போல் கடுமையாக திட்டி உள்ளார்.

இதனால் அடிக்கடி ஜோதிகா படப்பிடிப்பு தளத்தில் அழுது கொண்டிருப்பார். ஒருமுறை ஜோதிகா அழுவதை பார்த்த அவரது தாய் எனது மகளை இயக்குனர் இப்படி திட்டுகிறாரே என்று கோபப்பட்டு நாங்கள் மும்பைக்கு கிளம்புகிறோம் என்று கூறிவிட்டாராம்.

மம்மூட்டி தான் தென்னிந்தியாவிலேயே சிறந்த நடிகர்!.. ஜோதிகா சொன்ன சூப்பர் காரணம்!..

அதன் பிறகு மீண்டும் பட குழுவினர் சமாதானம் செய்து ஜோதிகாவை நடிக்க வைத்துள்ளனர். ஆனாலும் அந்த படப்பிடிப்பு முடியும் வரை ஜோதிகா அழாத நாளே கிடையாது என்று இயக்குனர் மணி பாரதி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.