அஜித் உட்பட ஒரு சில தமிழ் நடிகர்களுக்கு ஜோடி.. பல பிரச்சனைகளை கடந்து சாதித்த நடிகை பாவனா..

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பாவனா. இவர் தமிழில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் அவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்களாகும்.

நடிகை பாவனா கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். கடந்த 1986 ஆம் ஆண்டு பிறந்த இவர்  திருச்சூரில் தான் பள்ளி கல்லூரி படிப்பை முடித்தார். அதன் பிறகு அவர்  சினிமாவில் நடிக்க முயற்சி செய்தபோது அவருக்கு 2002 ஆம் ஆண்டு மலையாள சினிமா வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்தார்.

அறிமுகமான அடுத்த ஆண்டு அவர் ஆறு படங்களில் நடித்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு வரை ஏராளமான படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் மிஷ்கின் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’சித்திரம் பேசுதடி’ என்ற படத்தில் அவர் தமிழில் அறிமுகமானார். சாரு என்ற கேரக்டரில் அவர் அசத்தலாக நடித்திருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட கனமான கேரக்டரை அவர் மிக அசால்ட்டாக ஊதி தள்ளினார் என்று தான் சொல்ல வேண்டும். மிஷ்கின் பல நேரங்களில் அவருடைய நடிப்பை பாராட்டியுள்ளார்.

bhavana1

சித்திரம் பேசுதடி படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு தமிழில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ஸ்ரீகாந்த் நடித்த கிழக்கு கடற்கரை சாலை, பரத் நடித்த வெயில், ஜெயம் ரவி நடித்த தீபாவளி, மீண்டும் பரத் நடித்த கூடல் நகர் ஆகிய படங்களில் நடித்தார். அடுத்தடுத்து இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து  ஜீவாவுடன் ராமேஸ்வரம் என்ற படத்தை நடித்தார்.  இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆனால் வினய் ஹீரோவாக நடித்த ஜெயங்கொண்டான் என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாவனா மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த நிலையில் அஜித் நடித்த ’அசல்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீரா ரெட்டி மற்றும் பாவனா ஆகிய இருவரும் இந்த படத்தில் நாயகிகளாக நடித்திருந்தனர். பாவனாவின் கேரக்டர் நன்றாக இருந்தாலும் இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

bhavana2

இதனை அடுத்து அவர் தமிழில் நடிப்பதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டார் என்று சொல்லலாம். மலையாளம் மற்றும் கன்னட படங்களில்  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் பாவனா தற்போது தான் ’தி டோர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஒரு நடிகரின் காரணமாக அதிக பிரச்சனைகளை சந்தித்திருந்த பாவனா, பல சிக்கல்களை கடந்து சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். சமீபத்தில் நடிகர் அஜித் குமாரை விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் சந்தித்திருந்த புகைப்படங்களும் அதிகம் வைரலாகி இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.