மம்மூட்டி தான் தென்னிந்தியாவிலேயே சிறந்த நடிகர்!.. ஜோதிகா சொன்ன சூப்பர் காரணம்!..

36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்த நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் நிலையில், சமீப காலமாக மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார்.

ஓரினச்சேர்க்கை எனும் விவகாரமான கதையுடன் உருவாகியிருந்த அந்த படத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. முன்னணி நடிகர்கள் இது போன்ற போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் என சினிமா விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மம்மூட்டியை பாராட்டிய ஜோதிகா:

இந்நிலையில், பாலிவுட் நடிகை கரீனா கபூர், அனிமல் மற்றும் கங்குவா படத்தின் வில்லன் பாபி தியோல், நடிகர் சித்தார்த் ஆகிய பிரபலங்களுடன் நடந்த கலந்துரையாடலில் பேசிய ஜோதிகா தான் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் தென்னிந்தியாவில் நடித்துள்ளேன். ஆனால் என்னை பொறுத்த வரையில் நல்ல நடிகர் என்றால் அது மம்முட்டி அவர்கள் மட்டுமே என தனது லேட்டஸ்ட் ஹீரோவை புகழ்ந்து பேசியிருந்தார்.

எப்படி இது போன்ற கதையை தேர்வு செய்து நடிக்கிறீர்கள் இதனால் உங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இழப்பு ஏற்படாத என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில், பல பேரை அடிப்பவர்கள் தான் ஹீரோவா? கிடையவே கிடையாது. நல்ல கதைகளையும், நடிக்க முடியாத கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பவன் தான் ரியல் ஹீரோ எனக் கூறியிருந்தார்.

நடிகை ஜோதிகாவை தொடர்ந்து நடிகர் சித்தார்த்தும் மலையாள நடிகர் மம்மூட்டியின் கதைத் தேர்வு மற்றும் நடிப்பு எல்லாம் பிரம்மிக்க வைக்கிறது என்றும் கடந்த ஆண்டு நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் இந்த ஆண்டு காதல் தி கோர் படங்கள் அருமை என சித்தா படத்தின் ஹிரோ சித்தார்த் பாராட்டியிருந்தார்.

குவியும் ட்ரோல்:

கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஜோதிகா ஓவர் ஆக்டிங் என கிண்டல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆள் ரொம்பவே மெச்சூராக மாறி மம்மூட்டி படங்களை எல்லாம் பாராட்ட ஆரம்பித்துள்ளாரே என அவரது ரசிகர்களே அசந்து போய் பார்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்களே இல்லையா என்றும் மம்மூட்டியை விட மோகன்லால் எல்லாம் மலையாளத்திலேயே மாஸ் காட்டி வருகிறாரே உங்களுக்கு சான்ஸ் கொடுத்த ஹீரோ என்பதால் மட்டும் புகழக் கூடாது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதே ஜோதிகா தான் ஜாக்பாட் படத்தில் சண்டை எல்லாம் போட்டு செம கிரிஞ்சாக நடித்திருந்தார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.