தந்தி டிவியில் இருந்து பாண்டே வெளியேற காரணமான H.வினோத்..அஜீத்தால் வெளிவந்த பாண்டேவின் மற்றொரு முகம்

நாட்டில் அன்றாடம் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும், எதிர்கால அரசியல் நகர்வுகள் இப்படித்தான் இருக்கும் என்பதையும், அரசு எந்திரத்தின் குறைகளை தனது ஆதாரங்களால் நடுநடுங்க வைக்கும் பிரபல பத்திரிக்கையாளர் தான் ரங்கராஜ் பாண்டே. இவர் பேட்டி எடுக்காத பிரபலங்களே இல்லை எனும் அளவிற்கு தந்தி டிவியின் முகத்தையே தனது முகமாக மாற்றியவர்.

எதிராளர்களை கேள்வியில் திணறடித்து அவர்களின் கருத்துக்களையும், உண்மை முகத்தினையும் வெளிக்கொண்டுவரும் சிறந்த ஊடகவியலாளராக திகழும் ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியில் இருந்து விலகி தனியாக ஊடக நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கும் யோசனையில் இருந்திருக்கிறார்.

அப்போது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் தனது அடுத்தபடான இந்தி ரீமேக் பிங்க் படத்தினை தமிழில் அஜீத்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ என்னும் பெயரில் இயக்கத் திட்டமிட்டிருந்தார்.

அஜீத் இதில் மூன்று பெண்களைக் காப்பாற்றும் வழக்கறிஞராக வாதாட அவருக்கு எதிராக வாதாடும் கேரக்டரில் நடிக்க ரங்கராஜ் பாண்டேவை அணுகியிருக்கிறார் ஹெச். வினோத். ரங்கராஜ் பாண்டே ஹெச்.வினோத் அவருக்கு அறிமுகமாகும் முன்பே அவரின் சதுரங்க வேட்டை படத்தில் சொல்லப்பட்ட விழிப்புணர்வுக் கருத்துக்களை தனது மேடைப் பேச்சுகள் பலவற்றில் சொல்லியிருக்கிறார்.

பொருளாதார வல்லுநர்களையே மிரள வைத்த தேவர் பிலிம்ஸ்.. பூஜை முதல் ரிலீஸ் வரை பக்கா பிளானிங்..

தற்போது அந்த இயக்குநரே வந்து படத்தில் நடிக்கக் கேட்டதும், மேலும் அஜீத் கதாநாயகன் என்பதும், முக்கியமான வேடம் என்பதனாலும் கதையைக் கேட்டு உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார் ரங்கராஜ் பாண்டே. தந்தி  டிவியில் இருந்து வெளியேற நினைத்தவருக்கு இந்தப் பட வாய்ப்பும் அமைய இதனையே ஒரு கருவியாகப் பயன்படுத்தி அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி முதலில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் ரங்கராஜ் பாண்டே.

இந்தப் படத்தில் அவரின் கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் தியேட்டர்  ஒன்றில் அஜீத்துக்கு சமமாக அவருக்குக் கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. இதனை அவரது தம்பி மூலம் அறிந்த ரங்கராஜ் பாண்டே உடனே அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாது குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று அந்தக் கட்அவுட்டைப் பார்த்து உடனே இயக்குநருக்குப் போன் செய்திருக்கிறார்.

எப்படி ஹீரோவுக்கு நிகராக எனது கட்அவுட் என்று ஹெச். வினோத்திடம் கேட்க, அஜீத் சார் தான் அவ்வாறு வைக்கச் சொன்னார் என்பதையும், தாங்கள் முதலில் வைக்க திட்டமிட்டிருந்த கட் அவுட்டையும் காட்டியிருக்கின்றனர். இப்படித்தான் அவரின் சினிமா பயணம்  ஆரம்பித்ததாக சித்ரா லட்சுமணனுடனான பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் ரங்கராஜ் பாண்டே.

Published by
John

Recent Posts