ரூ.999க்கு ஜியோவின் மொபைல் போன்.. இவ்வளவு சிறப்பம்சங்களா?

ஜியோ நிறுவனம் ஏற்கனவே சில ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ரூபாய் 999க்கு புதிய போனை வெளியிட இருக்கும் நிலையில் அந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ பாரத் என்ற பெயரில் வெளியாக இருக்கும் இந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஜியோ பாரத் போன், ஜூலை 7ஆம் தேதி இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 4ஜி அம்சம் கொண்ட இந்த போனில் 1.77 இன்ச் டிஸ்ப்ளே, 0.3எம்பி ரியர் கேமரா, விஜிஏ செல்பி கேமரா மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. மேலும் எஃப்எம் ரேடியோ, டார்ச் மற்றும் விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் அம்சங்களுடன் வருகிறது.

1,500mAh பேட்டரி கொண்ட இந்த போனில் UPI கட்டணங்களை செலுத்தும் வசதியும் உள்ளது. அதாவது, JioPay செயலியைப் பயன்படுத்தி பயனர்கள் UPI பேமெண்ட்களைச் செய்யலாம் மற்றும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனில் JioSaavn மற்றும் JioCinema செயலிகளும் உள்ளது.

ஜியோ பாரத் போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் இங்கே:

* விலை: ரூ 999
* 1.77-இன்ச், 240 x 320 பிக்சல்கள் டிஸ்ப்ளே
* 1.3GHz குவாட் கோர் பிராஸசர்
* 512 எம்பி ரேம்
* 4 ஜிபி ஸ்டோரேஜ்
* 0.3MP பின்புற கேமரா, VGA செல்பி கேமரா
* 1,500mAh பேட்டரி
* KaiOS ஓஎஸ்
* 4ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் வசதிகள்
* UPI ஆதரவு
* JioSaavn மற்றும் JioCinema செயலிகள்

மலிவு விலையில் பேசிக் போன் மற்றும் UPI ஆதரவு, டிஜிட்டல் பணம் செலுத்த விரும்பும் பயனர்களுக்கு இந்த போன் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

Published by
Bala S

Recent Posts