படம் இருந்தா மட்டும் பத்தாதுப்பா… இதுதான் முக்கியம்… ஜெயம்ரவியை கலாய்க்கும் நெட்டிசன்கள்…

ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் உனக்கும் எனக்கும், தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல திரைபப்டங்களில் நடித்தார். இப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன.

தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தந்த ஜெயம் ரவிக்கு சில படங்கள் சறுக்கலை சந்தித்தது. பூலோகம், போகன், பூமி போன்ற திரைப்படங்களின் மூலம் தொடர் தோல்விகளை சந்தித்தார். நல்ல திறமை உள்ள ஜெயம் ரவி தனது திரைப்படங்களின் கதைகளை நன்கு தேர்ந்தெடுக்காததே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

பிரகாஷ் ராஜுக்கு இப்படியொரு அந்தஸ்து கொடுத்த கேப்டன்… என்ன மனுஷன்யா விஜயகாந்த்…

இந்தாண்டு தொடக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான அகிலன் திரைப்படமோ சரி சமீபத்தில் வெளியான இறைவன் திரைப்படமோ சரி இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இப்படங்கள் அனைத்துமே இவருக்கு தோல்வியையே சம்பாதித்து கொடுத்தன.

ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.

கமலுக்கு முந்தைய காதல் இளவரசன் ‘கிழக்கே போகும் ரயில்’ சுதாகரா இது..? இப்படி மாறிட்டாரே!

அதனால் இதே முறையை பின்பற்றலாம் என தீர்மானித்த ஜெயம்ரவி தற்போது மனிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரைத்தில் நடிக்கவுள்ளார். இப்படிபட்ட முறைகளை கையாள்வதால் இவரை நெட்டிசன்கள் இவர் ஜெயம் ரவி இல்லை ஜாயின்ட் ரவி என கலாய்த்து வருகின்றனர்.

மேலும் இவர் வரும் 2025ஆம் ஆண்டு வரை மிகவும் பிஸியாக இருப்பாராம். இவர் தற்போதே தனது கையில் 9 படங்கள் வைத்துள்ளாராம். ஆனால் இவர் சமீபத்தில் நடித்த எந்தவொரு திரைப்படங்களும் இவருக்கு வெற்றியடையாத நிலையில் இவ்வளவு படங்கள் வைத்திருந்தால் மட்டும் போதாது. நல்ல கதைகளை தேர்வு செய்து படத்தினையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என சமுக வலைதளங்களில் கருத்துகள் உலாவுகின்றன.

இசையமைப்பாளர்களின் Concert-களுக்கு நிகராக நடக்போகும் டான்ஸ் திருவிழா: Dance Don-ல் கலக்கப்போகும் பிரபலங்கள்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...