மன அமைதி தரும் ஜீவசமாதி வழிபாடு

இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மன அமைதியில்லாமல் இருக்கின்றனர். பெருகி வரும் நாகரீகங்களும் இயந்திர மயமான வாழ்க்கையும் தான் இதற்கு காரணம் என தாராளமாக சொல்லலாம்.

ஒரு இருபது வருடத்துக்கு முன்பு அப்படி எல்லாம் நாம் பார்த்திருக்க முடியாது எல்லோருக்கும் பிரச்சினைகள் இருந்தாலும் சிறிய பிரச்சினைகளை நினைத்து மனம் தளராமல் எல்லோரும் சந்தோஷமாக இருந்தனர்.

இயந்திரத்தனமான வாழ்க்கை முறை அப்போது இல்லாததே இதற்கு காரணம்.

தற்போது இயந்திரமயமான வாழ்வில் நிறைய பிரச்சினைகளை பார்க்க நேரிடுகிறது.

அனைவருமே ஒரு மகானை இறுகி பற்றிக்கொள்ள வேண்டும் சாய்பாபாவும், ஸ்ரீராகவேந்திரரும் மகான்கள் தான் அதிகம் பேர் இவரை வழிபட்டு மன அமைதியை தேடிக்கொள்கிறார்கள் இவர்களும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட தயங்குவதில்லை இவர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளனர் இவர்களின் ஜீவசமாதி மந்த்ராலயத்திலும் , சீரடியிலும் இருக்கிறது.

எல்லோராலும் அவ்வளவு தூரம் செலவழித்து செல்ல முடியாது அதனால் உங்கள் ஊரில் அருகாமையில் உள்ள ஜீவசமாதி அடைந்த மகான்களின் சமாதிக்கு அடிக்கடி சென்று வழிபடுங்கள். அங்கு கிடைக்கும் பாஸிட்டிவ் வைப்ரேஷன் உங்களை மனக்குழப்பத்தில் இருந்து காக்கும்.

தமிழ்நாட்டில் எத்தனையோ மகான்கள் எத்தனையோ ஊர்களில் ஜீவசமாதி அடைந்துள்ளனர். உங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் மகான்களின் ஜீவசமாதிக்கு சென்று வழிபடுங்கள் தினமும் செல்ல முடியாவிட்டாலும் குருமார்களுக்கு உகந்த வியாழக்கிழமை சென்று வழிபடுங்கள். குருமார்களை ஜீவசமாதியில் சென்று வழிபடுவதால் விடுபட முடியாத சிக்கல்களில் இருந்து கூட உங்களுக்கு தீர்வு கிடைக்கும். மகான்களின் வழிகாட்டுதல் கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews