ஹேமாமாலினி நடிக்க வேண்டிய படம்.. அவருக்கு பதில் அறிமுகமான ஜெயலலிதா.. வெண்ணிற ஆடை செய்த சாதனை..!

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி பாலிவுட் ஹாலிவுட் என கலக்கியவர் பிரியங்கா சோப்ரா என்பது தெரிந்ததே. அதேபோல் கடந்த 60களில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி அதன்பின் தமிழ் சினிமாவே வேண்டாம் என்று பாலிவுட் சென்று அங்கு பல வருடங்களாக நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர்தான் ஹேமாமாலினி.

நடிகை ஹேமாமாலினி தமிழில் உருவான இது சத்தியம் என்ற திரைப்படத்தில் கடந்த 1963 ஆம் ஆண்டு அறிமுகமானார். அசோகன், சந்திரகாந்தா நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் ஹேமாமாலினி அதன்பின் தமிழில் பல வருடங்களாக நடிக்கவே இல்லை. ஆனாலும் அவர் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு வந்தார். அந்த படம் தான் வெண்ணிற ஆடை. ஆனால் அந்த படத்தின் சில காட்சிகளை நடிக்க வைத்து பார்த்த இயக்குனர் ஸ்ரீதர் இந்த கேரக்டருக்கு நீங்கள் பொருத்தமாக இல்லை என்று ரிஜெக்ட் செய்தார். அதன் பிறகு தான் அவர் தமிழ் சினிமாவே வேண்டாம் என்று பாலிவுட் சென்றுவிட்டார்.

ஹேமாமாலினி ரிஜெக்ட் செய்யப்பட்ட கேரக்டரில் தான் ஜெயலலிதா அறிமுகமானார். வெண்ணிறை ஆடை திரைப்படத்தில் ஜெயலலிதா மட்டும் அறிமுகமாகவில்லை, வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய நான்கு பேரும்  அறிமுகம் ஆனார்கள். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்த படத்தில் அறிமுகமான நான்கு பேர்களில் மூன்று பேர் பின்னாளில் அரசியலில் இருந்தார்கள்.

சோ ஜோடியாக ஜெயலலிதா நடித்த படம்.. ‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்? ‘வந்தாளே மகராசி’ வெற்றி பெற்ற கதை..!

ஜெயலலிதா அதிமுக என்ற கட்சியை தலைமையேற்று முதலமைச்சர் ஆனார் என்பது தெரிந்ததே. அதேபோல் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா. ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஸ்ரீகாந்த் பொருத்தவரை ஒரு காங்கிரஸ்காரராக இருந்தார். காமராஜர் தொண்டராக இருந்த நிலையில் அவர் இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்து போராடினார். அதேபோல் இந்த படத்தில் நடித்த இன்னொரு நடிகர் மேஜர் சுந்தர்ராஜன். அவர் பின்னாளில் சிவாஜிகணேசன் ஆரம்பித்த கட்சியில் சில மாதங்கள் இருந்து அதன்பின் அரசியலில் இருந்து விலகினார்.

வெண்ணிற ஆடை திரைப்படம் கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மனதில் இடம் பெற்றது ஸ்ரீகாந்த் இந்த படத்தில் டாக்டராக நடித்திருப்பார். அவரை ஜெயலலிதா மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகிய இருவருமே காதலிப்பார்கள். ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்தை வெண்ணிற ஆடை நிர்மலா காதலிக்கிறார் என்று தெரிந்ததும், ஜெயலலிதா எடுக்கும் அதிர்ச்சி முடிவு தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

இந்த படத்தில் அறிமுகமான ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலாம் வெண்ணிற ஆடை மூர்த்தி, ஸ்ரீகாந்த் ஆகிய நான்கு பேருமே அதன் பிறகு தமிழ் திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்தார்கள்.

சிவாஜியுடன் நடித்து எம்.ஜி.ஆருடன் நடிக்க ஆசைப்பட்ட 5 நடிகைகள்!

இந்த படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இரட்டையர்கள் இசையமைத்து இருந்தார்கள். இந்த படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அதில் கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல என்ற சுசீலாவின் பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. நீதி இதுதானா என்ற பாடல், நீராடும் கண்கள் என்ற பாடல் ஆகியவையும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜாக்கிசான், கமல்ஹாசனுடன் நடித்த நடிகை.. சொந்தமாக உழைத்து 100 கோடிக்கும் மேல் சம்பாதித்தவர்..!

அதேபோல் சித்திரமே என்ற பிபி ஸ்ரீனிவாசன் ஜானகி பாடிய பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது. மொத்தத்தில் ஒரு முக்கோண காதலை மிக அருமையாக இயக்கியுள்ள ஸ்ரீதருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

Published by
Bala S

Recent Posts