ஜெயலலிதாவே வியந்து பாராட்டிய ‘பிச்சாதிபதி‘.. மிமிக்ரியில் மிரள வைக்கும் படவா கோபி..

இந்தியில் ஒளிபரப்பான க்ரோர்பதி நிகழ்ச்சியை தமிழில் சன்டிவி சரத்குமாரை வைத்து கோடீஸ்வரன் என்ற பெயரில் தயாரித்தது. பொது அறிவை வளர்த்த இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை அதிகப்படுத்தி சன் டிவியின் டி.ஆர்.பி யை எகிற வைத்தது. தினமும் இந்நிகழ்ச்சியைக் காண டிவி முன் தவம் கிடந்தவர்கள் ஏராளம்.

அப்போது சன்டிவிக்குப் போட்டியாக ஜெயாடிவி இருந்தது. அதன்பின்னர் வந்தது தான் ஸ்டார் விஜய், ஜீதமிழ், கலர்ஸ் தமிழ் எல்லாம். சன்டிவியைப் போல் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி வந்த ஜெயாடிவி கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்குப் போட்டியாக அதைக் கலாய்க்கும் விதத்தில் பிச்சாதிபதி என்ற நிகழ்ச்சியை தயாரித்தது.

இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் மிமிக்ரி கலைஞர் படவா கோபி. இவரது திறமையைப் பார்த்த கே. பாலசந்தர் அவர் இயக்கிய பொய் படத்தில் அறிமுகப்படுத்தினார். தனது மிமிக்ரி கலையால் ஹிட் அடித்த பிச்சாதிபதி நிகழ்ச்சி பற்றி படவா கோபி கூறும் போது, “கல்லூரி நாள்களில் மிமிக்ரியை ரசித்து பல நிகழ்ச்சிகளில் நான் செய்தது பெருமளவில் வரவேற்கப்பட்டது.

தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளேன். சன்டிவியில் அப்போது கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சரத்குமார் தொகுத்து வழங்கினார். அதற்குப் போட்டியாக நாங்கள் ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி ஜெயாடிவிக்குக் கொண்டு வந்தோம். அது தான் பிச்சாதிபதி நிகழ்ச்சி. அதைப் பார்த்து விட்டு ஜெயலலிதாவே பாராட்டினாராம்.

படப்பெட்டியை தலையில் சுமந்து சென்ற நம்பியார்.. காஷ்மீரில் ரிலீசான ‘தேன் நிலவு‘

எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார், கிருபானந்தவாரியார் குரல்களில் தான் அப்போது பல மிமிக்ரி கலைஞர்களும் பேசுவார்கள். நான் தான் சச்சின் டெண்டுல்கர் வாய்ஸ்ல எல்லாம் பேசினேன். 2000த்துக்கு அப்புறம் கிரிக்கெட்டர்ஸ் வாய்ஸ் என வேர்ல்டு லெவலில் பண்ணினேன். இங்கிலீஷ்ல மிமிக்ரி பண்ணிய முதல் ஆள் நான் தான்.

எல்லோருக்குமே இயல்பா இருக்குற கேரக்டர் தான் இந்த இமிடேஷன். அதை ஒரு சிலர் கொஞ்ச நாள்களில் விட்டு விடுகிறார்கள். நமக்கு என்ன வரும்னு அதுலயே கவனம் செலுத்தினா அந்தக் குரல் நமக்கு ஈசியா அந்தக் குரல் வந்துடும்.

நம்ம பேசிய குரல் மாடுலேஷனை நல்லாருக்கா என அவர்களிடம் கேட்கக்கூடாது. அவங்களா அதைக் கேட்டு இது ரொம்ப நல்லாருக்கேன்னு சொன்னா அது தான் சரி. எல்லாரும் வந்து வாய்ஸ் மிமிக்ரி பண்ணுவாங்க. ஆனா நீங்க வந்து ஆடிட்டியூட் மிமிக்ரி பண்ணுறீங்க…ன்னு ரஜினி சாரே சொல்லிருக்கார். இவ்வாறு படவா கோபி தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...