முதல் முறையாக.. ஐபிஎல் வரலாற்றில் இஷாந்த் ஷர்மா செஞ்ச சம்பவம்.. இதுக்கே 17 சீசன் ஆயிடுச்சா..

ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே இந்திய வீரர்கள் மட்டுமில்லாமல் மற்ற அணிகளில் உள்ள வெளிநாட்டு சர்வதேச வீரர்கள் கூட இணைந்து ஆடுவதற்கு மிக முக்கியமான ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில், 20 வயதை கூட எட்டாத இளம் வீரர்களும் இன்னொரு பக்கம் 35 முதல் 40 வயதுக்குள் இருக்கும் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களும் இணைந்து ஆடுவதால் இளம் வீரர்களுக்கு மிகச்சிறந்த ஒரு பிளாட்ஃபார்ம் ஆகவும் ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த சீசனிலும் கூட ஏராளமான இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடி தங்களின் பெயரை கிரிக்கெட் அரங்கிலும் பதித்து பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். இந்திய அணியில் இருந்து வருண் சக்கரவர்த்தி, அசுதோஷ் ஷர்மா, அபிஷேக் ஷர்மா, ராஜத் படிதர், ஹர்ஷித் ராணா என ஏராளமான இளம் வீரர்கள் இந்த சீசனில் நம்பிக்கை ஊட்டும் வீரர்களாக அவர்களின் அணிக்கு இருந்து வரும் அதே வேளையில் சில சீனியர் வீரர்களும் 35 வயதை கடந்துள்ள நிலையில் இளம் வீரர்களுக்கு போட்டியாக அதிக எனர்ஜியுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஆடி வரும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் ஆட முடியாமல் போனாலும் தொடர்ந்து தற்போது ஆடிவரும் அவர் பெங்களூர் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

இவர்கள் இருவரும் டெல்லியை சேர்ந்தவர்கள் என்பதால் விராட் கோலி விக்கெட்டை எடுத்ததும் ஏதோ குழந்தைத்தனமாக விராட்டை இஷாந்த் ஷர்மா கிண்டல் செய்திருந்தார். அதனை கோலியும் ஜாலியாக எடுத்துக் கொள்ள, இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரல் ஆகி இருந்தது.

இந்த நிலையில் தான் கடந்த 17 ஐபிஎல் சீசன்களில் முதல் முறையாக விராட் கோலியின் விக்கெட்டை முதல் முறையாக இஷாந்த் ஷர்மா கைப்பற்றி உள்ளது தான் சிறப்பம்சமான தகவலாக அமைந்துள்ளது. இதுவரை பல போட்டிகளில் இருவரும் நேருக்கு நேர் மோதி இருந்தாலும் தற்போது தான் விராட் கோலி விக்கெட்டை இஷாந்த் ஷர்மா எடுத்துள்ளார் என்பது பலருக்கும் அதிர்ச்சியான தகவலாக மட்டும் இல்லாமல் அதே வேளையில் வியப்பான தகவலாகவும் பலருக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...