இதுக்கு சிஎஸ்கேவே பரவாயில்ல.. ஆர்சிபி, மும்பை பேட்ஸ்மேன்கள் சேர்ந்து சொதப்பிய விஷயம்.. இத நோட் பண்ணலயே..

ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே ஒரு சில அணிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுஸ் எப்போதுமே அதிகமாக இருக்கும். அதில் டாப்பில் இருக்கும் மூன்று முக்கியமான அணிகள் தான் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவை. இந்த அணிகள் எந்த போட்டியில் ஆடினாலும் அதில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் அவர்கள் தோற்றாலும், ஜெயித்தாலும் தொடர்ந்து ஆதரவையும் மிகச் சிறப்பாக ரசிகர்கள் கொடுத்து வருவார்கள்.

இதில் ஆர்சிபி அணி முதல் 8 போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றுள்ளது. சிஎஸ்கேவுக்கு எதிராக ஒரே ஒரு போட்டி மட்டும் அவர்களுக்கு மீதம் இருக்கும் நிலையில் அதில் சில குறிப்பிட்ட விஷயங்கள் நடந்து வெற்றி பெற்றால் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலையும் உள்ளது.

இதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி முக்கியமாக கருதப்படும் நிலையில் இதில் வெற்றி பெற்றால் அவர்கள் பிளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்து விடலாம். ஆனால் அதே வேளையில் இதில் மற்றொரு அணியான மும்பை இந்தியன்ஸ் இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி உள்ளது.

அவர்களுக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மீதம் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் கூட பெரிய தாக்கம் எதுவும் புள்ளி பட்டியலில் ஏற்பட போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது ரசிகர்கள் அனைவரின் பார்வையும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதும் போட்டியில் தான் உள்ளது.

இரு அணிகளில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு அதிகமாகவும், மறுபுறம் தோல்வியடையும் அணிக்கு மங்கிப் போகும் என்பதால் எப்படியாவது இந்த போட்டியில் வென்று விட வேண்டும் என இரு அணிகளும் கடுமையாக போராடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் தான் இந்த சீசனில் முதல் போட்டியில் மோதி இருந்த நிலையில் இதில் சிஎஸ்கே சிறப்பாக வெற்றி பெற்று இந்த பயணத்தையும் அற்புதமாக தொடங்கி இருந்தனர்.

இதற்கிடையே இந்த சீசனில் ஆர்சிபி மற்றும் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சேர்ந்து செய்த மோசமான சாதனையை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் இணைந்து 26 முறை டக் அவுட் ஆகி உள்ளனர். ஆனால் அதே வேளையில் சிஎஸ்கே, ராஜஸ்தான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என ஐந்து அணிகளில் உள்ள பேட்ஸ்மேன்கள் சேர்ந்தே 25 முறை தான் டக் அவுட் ஆகி உள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை டக் அவுட்டான தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணியிலும், இரண்டாவது இடத்தில் இருக்கும் ரோஹித் மும்பையிலும், மேக்ஸ்வெல் ஆர்சிபி அணிக்காகவும் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...