ரிலீஸிற்கு முன்பே பல கோடி வசூல் செய்து வரும் ஜெயிலர் படம்! முன்பதிவு மட்டும் இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் இந்த படத்திற்க்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பல மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளதால் அங்குள்ள ரசிகர்களுக்கும் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் மலையாளத்தில் ஜெயிலர் திரைப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் மலையாள முன்னணி ஹீரோ மோகன்லால் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஜெயிலர் முன்பதிவுகளில் ₹19 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி வருகிறது. இந்தியாவில் முன்பதிவு மூலம் ஜெயிலர் படம் ₹12.8 கோடி சம்பாதித்துள்ளது. படத்தின் தமிழ் பதிப்பில் சுமார் ₹11.7 கோடியும், தெலுங்கு பதிப்பு மூலம் ₹1.1 கோடியும் வசூலித்துள்ளது.

அமெரிக்காவில் ஜெயிலர் படத்திற்கான 37,000 டிக்கெட்டுகளை விற்று $802,628 (₹6.64 கோடி) வசூலித்துள்ளது. முன்பதிவு டிக்கெட் விற்பனையில் இந்த முறை $1 மில்லியனைத் தாண்டும் என நம்பப்படுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜெயிலரின் திரையரங்கு உரிமை ₹123 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதில் 60 கோடி ரூபாய் தமிழகத்தில் இருந்தும், கர்நாடகாவில் ₹10 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ₹12 கோடியும், கேரளாவில் ₹5.5 கோடியும் வசூலாகியுள்ளது. மேலும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து ₹4 கோடியும் கிடைத்தது.

லியோக்கு போட்டியாக அப்டேட்… மோதலை உறுதி படுத்தும் விடாமுயற்சி படக்குழு..

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் மோகன்லால்க்கு ₹8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ₹4 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஜாக்கி ஷெராஃப் ₹4 கோடி, தமன்னா பாட்டியா ₹3 கோடி, யோகி பாபு ₹1 கோடி, ரம்யா கிருஷ்ணன் ₹80 லட்சம், வசந்த் ரவி ₹30 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...