இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தா இது… என்னாச்சு… ஆளே மாறியிருக்கிறாரே…

தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத்.இவர் பின்னணி பாடகர் மற்றும் பாடலாசிரியரும் ஆவார். இவரை செல்லமாக டி.எஸ்.பி என்று அழைப்பார்கள். 21 வருடங்களுக்கு மேல் திரையுலகில் பணியாற்றி வரும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் 100 படங்களுக்கு அதிகமாக இசையமைத்துள்ளார். இவருக்கு ‘துள்ளல் இசையின் நாயகன் ‘ என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

1999 ஆம் ஆண்டு தனது 19 வது வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு ‘பத்ரி’ திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். சிறந்த இசையமைப்பாளர்கான பல விருதுகளைப் பெற்றுள்ள தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ மற்றும் நடிகர் விஷாலின் ‘ரத்னம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரரான தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் சில பாடல்களை பாடியுள்ளார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது தனது வாழ்வின் முக்கியமான நிகழ்வு என்று ஒரு பதிவை போட்டுள்ளார். அது என்னவென்றல் சென்னையில் இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவிற்கு இசைஞானி இளையராஜா சென்றுள்ளார். அதைப் பற்றிய பதிவு தான் அது.

அந்த பதிவில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருப்பது என்னவென்றால், எனது மிகப்பெரிய வாழ்நாள் கனவு நிறைவேறியது. இசைஞானி இளையராஜா அவர்கள் எனது ஸ்டுடியோவிற்குள் வரவேண்டும், அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

நியாயமான ஆசைகளுக்கு இந்த பிரபஞ்சம் எப்போதும் நமக்கு துணையாக இருக்கும் நேரம் வரும்போது வழிவிடும். அதன்படி என் ஆசை நிறைவேறியிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் தேவி ஸ்ரீ பிரசாத் உடல் மெலிந்து ஆளே மாறியிருக்கிறார். அதைக் கண்ட அவரது ரசிகர்கள் தங்களுக்கு என்னவாயிற்று, உடல்நிலை நன்றாக உள்ளதா என்ற கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...