ரஷ்யாவில் இப்படி ஒரு தங்க மலையா? ஷாக்கான உலகநாடுகள்.. அமெரிக்க தீட்டிய புதுத் திட்டம்!

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரானது உலகின் பெரும் பேசுபொருளாக உள்ளது. ரஷ்யா உக்ரைனை கடந்த சில நாட்களாக வான் வழி, தரை வழி மற்றும் நீர் வழி என மூன்று வழிகளிலும் தாக்கியது.

உக்ரைன்- ரஷ்யா போரால் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினையும், உக்ரைனுக்கு தங்களது ஆதரவினையும் தெரிவிக்க எண்ணி பொருளாதார தடையினை விதித்தன.

ரஷ்யாமீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் தங்கத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட தங்கத்தின் விலை உலகின் பல நாடுகளிலும் அதிகரித்தது.

மற்றொருபுறம் இந்த பொருளாதாரத் தடையால் ரஷ்ய அரசு வரலாறு காணாத அளவில் நிதி நெருக்கடியினைச் சந்தித்துள்ளது. பொருளாதார நெருக்கடியினைச் சமாளிக்க நினைத்து ரஷ்யா தங்கள் நாட்டில் உள்ள தங்கத்தை விற்க முடிவு செய்துள்ளது.

அதன்படி ரஷ்யாவில் 2200 டன் தங்கமானது தற்போது கையிருப்பில் உள்ளது தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் தங்க இருப்பு குறித்த விவரம் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம் அமெரிக்கா அதன் நேச நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவின் இந்த முயற்சியினையும் முறியடிக்கத் திட்டமிட்டுள்ளது.

Published by
Gayathri A

Recent Posts