விஜய் சேதுபதி நோ சொல்லிய கேரக்டரில் சிவகார்த்திகேயனா? தலைவர் ‘171’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ‘தலைவர் 171’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லியோவின் வெற்றிக்குப்பின் அவர் இயக்கும் படம் ‘தலைவர் 171’. அதற்கான பணிகளை லோகேஷ் தொடங்கி விட்டார்.

முதற்கட்ட பணிகளாக நடிகர்களை தேர்வு செய்து வருகிறார். ஆக்‌ஷனை மையமாக வைத்து வரும் லோகேஷின் படங்களை நல்ல வரவேற்பை பெறுகிறது. கைதி,மாஸ்டர்,விக்ரம், லியோ என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் லோகேஷ் உடன் இணைந்து படம் பண்ண வேண்டுமென்று இருந்தார் சூப்பர் ஸ்டார்.

அதற்கான சமயம் இப்போது கூடி வந்திருக்கிறது. தலைவர் 170 ஷூட்டிங் முடிந்த உடன் சூப்பர் ஸ்டார் அடுத்த படத்தில் இணைந்து விடுவார் என்று கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட், மல்டி ஸ்டார் படங்கள் என இப்போது வருகின்ற எல்லா படங்களும் ஒரே டெம்ளேட் தான்.

அதற்கு தலைவர் 171 விதிவிலக்கல்ல ஏற்கனவே இந்தப்படத்தில் மம்முட்டி, ராகவா லாரன்ஸ் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்துவருகிறார். ஹீரோ,வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் தூள் கிளப்புபவர் விஜய் சேதுபதி. சமீபகாலமாக ஹீரோ சப்ஜெட்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதாக கூறப்படுகிறது.

அவர் நடித்து வரும், மகாராஜா மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் இந்த இரண்டு படங்களையும் முடிப்பதற்கே நீண்ட காலமாகும் இதனால், தலைவர் 171க்கு கால்ஷீட் கொடுப்பது கடினம் என்பதால் தலைவர்171 வாய்ப்பினை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

sivakarthikayen with rajini

இந்நிலையில் சிவகார்த்திகேயனிடம் தலைவர் 171 படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக தெரிகிறது. அந்த கேரக்டர் விஜய் சேதுபதி நடிக்க மறுத்த வில்லனா அல்லது வேறு ஏதும் முக்கிய ரோலா என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டாருடன், சிவகார்த்திகேயன் இணைவது நிஜமானால், இருவரது ரசிகர்களும் குஷி ஆகி கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews