வெள்ளரிக்காயை இப்படி சாப்பிடாதீங்க; கோடை காலம் தானேன்னு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலும் ஆபத்து!

அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ள வெள்ளரிக்காய், கோடை காலத்தில் மக்களுக்கு தாகத்தை தணிக்க உதவுகிறது. வெள்ளரிக்காயில் கிட்டதட்ட 96 சதவீத நீர்ச்சத்து உள்ளதால் தாகத்தை தணீக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் தர்ப்பூசணியை விட வெள்ளரிக்காய் தான் சிறந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செரிமானத்தை அதிகரிப்பது, சிறுநீரக கற்களை கரைப்பது, வயிற்று புண்களை ஆற்றுவது, சருமத்தை பளபளப்பாக்குவது என வெள்ளரிக்காயில் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது வெள்ளரிக்காய்க்கும் பொருத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே வெள்ளரிக்காயை எப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…

– இரவில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் அது தூக்கத்தையும், ஜீரண சக்தியையும் பாதிக்கும்

– வெள்ளரி விதையில் குக்குர்பிட்டின் என்ற மூலப்பொருள் உள்ளது. இது நம் உடலின் சமநிலையை பாதித்து, வயிறு உப்புசம், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்

– சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிட்டால் சைனஸ் நொந்தரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லது.

– வெள்ளரிக்காயில் உள்ள குக்குர்பிட்டின் என்சைம் அமெரிக்கன் அகாடமி ஆப் அலர்ஜி நடத்திய ஆய்வில் வெள்ளரிகாய், முலாம்பழம், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றை சாப்பிடும்போது சரும அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்கன் அகாடமி ஆப் அலர்ஜி நடத்திய ஆய்வில் வெள்ளரிகாய், முலாம்பழம், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றை சாப்பிடும்போது குறிப்பிட்ட சிலருக்கு தோல் அலர்ஜி ஏற்படுவதை கண்டறிந்துள்ளது,

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews