அருவி பட இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா…

கடந்த 2016 ஆம் ஆண்டு அதிதி பாலன், அஞ்சலி வரதன், பிரதீப் ஆண்டனி, கவிதா பாரதி ஆகியோரது நடிப்பில் இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ‘அருவி’. இது சமூக- அரசியல் பற்றிய கதையம்சம் கொண்ட படமாகும்.

ஒரு பெண் தன் வாழ்வில் சமூகத்தினால் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை சித்தரிப்பதும், நவீன பண்பாட்டின் இயல்பிலிருந்து வெளிப்பட நினைக்கும் புரட்சிகரமான இளம்பெண்ணின் முயற்சியை இத்திரைப்படம் காட்டுகிறது. பல விமர்சனங்களை தாண்டி சமூகத்தில் நடப்பவற்றை நேரடியாக கூறியதால் மக்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் அருண் பிரபுவிற்கு இது அறிமுக திரைப்படம். ஆனாலும் தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

அந்தப் படத்திற்கு பிறகு 2021 ஆம் ஆண்டு பிரதீப் ஆண்டனி நடிப்பில் ‘வாழ்’ என்ற படத்தை இயக்கினார். இது நடிகர் சிவகார்த்திகேயன் ப்ரொடெக்ஷன் தயாரிப்பில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது. மென்பொருள் துறையில் வேலை செய்யும் சராசரி இளைஞன் எதிர்பாராத விதமாக தன் வாழ்வில் நுழையும் பெண்ணுடன் மேற்கொள்ளும் பயணத்தில் அவன் பெற்றுக்கொண்டதும் கற்றுக்கொண்டதும் தான் கதை.

கதாநாயகனின் பயணத்தின் போது இயற்கையின் மூலமாகவும், சக மனிதர்கள் மூலமாக பெற்றுக்கொள்ளும் அனுபவங்களை கூறும் விதம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தன. கொரோனா பெருந்தொற்றின் காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட மன இறுக்கத்தை இத்திரைப்படம் சற்று இலகுவாக்க வைத்தது என்று சொல்லலாம்.

இதை தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபு இயக்கவிருக்கும் மூன்றாவது படத்தில் நாயகனாக விஜய் ஆண்டனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ப்ரீ ப்ரொடெக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...