டிக்டாக்கை விலைக்கு வாங்குறதா கூகுள் நிறுவனம்? சுந்தர் பிச்சை விளக்கம்


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக டிக்டாக், ஹலோ உள்பட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவை அடுத்து அமெரிக்காவும் டிக்டாக் நிறுவனத்தை தடை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு 90 நாட்கள் கெடு கொடுத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்குள் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு டிக்டாக்கை விற்பனை செய்யவில்லை என்றால் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்

இதனை அடுத்து டிக்டாக்கை விலைக்கு வாங்குவதற்காக அமெரிக்க நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கூகுள் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்க இருப்பதாக கூறப்பட்டது.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் ’டிக் டாக் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஐடியா எதுவும் தங்கள் நிறுவனத்திற்கு இல்லை என்று தெரிவித்தார். இதனை அடுத்து டிக்டாக்கை கூகுள் வாங்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது

Published by
Staff

Recent Posts