எனது சொத்து மதிப்பு ’0’ என கூறிய அனில் அம்பானி.. ஆனால் உண்மையில் இத்தனை கோடி சொத்தா?

இங்கிலாந்து நீதிமன்றத்தில் அனில் அம்பானி தனது சொத்து மதிப்பு ’0’ எனக் கூறிய நிலையில் அவருக்கு உண்மையில் நூற்றுக்கணக்கான கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானி ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் தற்போது அவர் தனது சொத்து மதிப்பு ’0’ என இங்கிலாந்து நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல் என்ற நிறுவனம் ஏலம் விடப்படுவதை அடுத்து அந்த நிறுவனம் 9,650 கோடிக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு காலத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் ஒருவராக அனில் அம்பானி இருந்தார் என்றும் அவர் உச்சத்தில் இருந்தபோது அவரது சொத்து மதிப்பு 1.12 லட்சம் கோடி என்றும் கூறப்படுகிறது.

ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்து நீதிமன்றத்தில் அவர் ஆஜரானபோது தனது சொத்து மதிப்பு ’0’ எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனில் அம்பானி இங்கிலாந்து நீதிமன்றத்தில் தனது சொத்து மதிப்பு ’0’ என கூறினாலும் மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான மிகப்பெரிய 17 மாடி வீடு மற்றும் 20 கோடி மதிப்புள்ள கார் உள்பட அவரது சொத்து மதிப்பு சுமார் 720 கோடி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அவர் நீதிமன்றத்திற்கு கூறியது போல் அவரது சொத்து மதிப்பு ’0’ இல்லை என்றும் அவரது பெயரில் வேண்டுமானால் சொத்து இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரது உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மீது நூற்றுக்கணக்கான கோடி சொத்து மதிப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் அனில் அம்பானி வணிக ராஜ்ஜியத்தின் உச்சத்தில் இருந்தார் என்பதும் ஆசியாவின் ஆறாவது பணக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நிதி மோசடி செய்ததாக அவரது நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதை அடுத்து செபி அவரது நிறுவனத்தை பங்குச் சந்தையில் தடை செய்தது. இதையடுத்து தான் அவரது நிறுவனம் படிப்படியாக நஷ்டம் அடைய தொடங்கியது என்பதும் அவருக்கு கடன்கள் அதிகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது

Published by
Bala S

Recent Posts