இறைதரிசனம் முடிஞ்சபின் கோவிலில் அமரலாமா?!



கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்தபின், கோவில் பிரகாரத்துல உட்கார்ந்துட்டு போகனும்ன்னும், ம்ஹும், உட்கார்ந்தா இறைவனை தரிசித்த புண்ணியம்லாம் போய்டும்ன்னும் சொல்வாங்க.


சிவன், அம்மன் மாதிரியான சைவ கோவிலுக்கு போய்ட்டு திரும்பும்போது நம்மோட பாதுகாப்புக்குன்னு பூதகணங்களை அம்மையப்பன் அனுப்பி வைப்பாங்க. அதனால், பாதுகாப்புக்கு நன்றி சொல்லும்விதமா கோவிலில் உட்கார்ந்து அவனுக்கு நன்றி சொல்லிட்டு வீட்டுக்கு திரும்பனும்.

ஆனா, பெருமாள், வைணவ கோவிலுக்கு போய், தரிசனம் முடிஞ்சு திரும்பும்போது, நம்மோடு லட்சுமிதேவியை பெருமாள் அனுப்பி வைப்பார். அதனால், லட்சுமி நம்மோடு நம் வீட்டுக்கு வரனும்ன்னா, இறைதரிசனம் முடிஞ்சதும் நேராய் வீட்டுக்கு போகனும். மத்தபடி எங்கயும் தங்கவோ, கோவிலில் உட்காரவோ கூடாது. இதை முடிஞ்சளவுக்கு கடைப்பிடிக்கனும். ஆன்மீக யாத்திரையா போறவங்களுக்கு இது கணக்கில்வராது.

Published by
Staff

Recent Posts