உங்கள் வாழ்க்கையில் வறுமை நீங்க… அன்னம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டுமா? நாளை மறக்காம இப்படி வழிபடுங்க…!

ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய மகா அன்னாபிஷேகம் பற்றி பார்ப்போம்.

சிவபெருமானை வழிபடக்கூடிய பல அற்புத நாள்களில் ஒன்று பௌர்ணமி. அதிலும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு செய்யக்கூடிய அன்னாபிஷேகம் மிக மிக முக்கியமான நாள். இந்த வருடம் அந்த நாளில் கிரகணமும் வருகிறது.

Lunar eclipse
Lunar eclipse

பொதுவாக ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொன்றைப் பற்றி உயிர்கள் வாழும். அந்த வகையில் கலியுகத்தில் அன்னத்தைப் பற்றியே ஆன்மா வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்த உயிரானது நிலைத்து இருக்க வேண்டுமானால் இந்த உடலில் வலிமை வேண்டும்.

அந்த உடலுக்கு வலிமை சேர்ப்பது உணவு. அந்த உணவில் பிரதானமானது அன்னம். அதனால் தான் அன்னம் ஒடுங்கினால் அத்தனையும் ஒடுங்கி விடும். அந்த அன்னத்தை நமக்குக் குறையாத அளவுக்கு வாரி வழங்குவதற்கு சிவபெருமானை வழிபடக்கூடிய பல அற்புதமான நாள்களில் ஒன்று தான் இந்த ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி.

இந்த ஆண்டில் சந்திரகிரகணம் வருவதால் நிறைய பேருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த வழிபாட்டை நாம் செய்யலாமா? எப்போது செய்வது? என்று. சந்திரகிரகணத்துக்கும் இந்த ஐப்பசி பௌர்ணமி வழிபாட்டுக்கும் சம்பந்தம் கிடையாது.

ஏன்னா கிரகணமே பின்னிரவு நேரத்தில் தான் ஆரம்பிக்கிறது. அதனால நாம் காலை அல்லது மதியத்திற்குள் இந்த வழிபாட்டை நிறைவு செய்துவிடலாம். 28.10.2023 அன்று இரவு 11.31 மணிக்குத் துவங்கி மறுநாள் அதிகாலை 03.36 மணி வரை சந்திரகிரகணம் நீடிக்கிறது.

அன்னாபிஷேகம் செய்ய காலை 7.45 மணி முதல் 8.45 வரை அன்னாபிஷேகம் செய்யலாம். அதற்குப் பிறகு 10.35 மணி முதல் 01.20 மணி வரை இந்த வழிபாட்டை செய்து கொள்ளலாம். வீட்டில் சுத்தமான பச்சரிசி சாதம் வடித்து அந்த சாதத்தை சிவலிங்கத்தில் மேல் கொட்டி முழுவதும் அன்னாபிஷேகம் செய்வது போல மாலை, வெத்தலைப்பாக்கு, பழம், உதிரிப்பூக்கள் போட்டு அலங்கரிக்க வேண்டும்.

நமக்கு விருப்பமான பொருள்கள் எல்லாம் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள்னு என்ன வேணாலும் வைக்கலாம். அற்புதமான பாடல்கள் எல்லாம் நாம் பாராயணம் பண்ணலாம்.

காலையில் இந்த அன்னாபிஷேகம் செய்ததும் அதை அப்படியே வைத்திருந்து மாலை 6 மணிக்கு மேல் அந்த அன்னத்தை எடுத்து விடலாம்.

Annabishekam 2
Annabishekam 2

பொதுவாக இந்த அன்னத்தை எடுத்து ஜலவாழ் பிராணிகளுக்கு நாம் கொடுப்பது தான் முறை. மீன், தவளை என்று குளத்தில் உள்ள உயிர்கள் அதை சாப்பிட வேண்டும். வாய்ப்பு இல்லாதவர்கள் ஒவ்வொரு பிடிசாதத்தையும் எடுத்துக் கொண்டு காக்கை, குருவி, எறும்புகளுக்கு என்று கொடுக்கலாம்.

மீதியை சுவாமியின் பிரசாதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் லிங்கம் இல்லாதவர்கள் ஒரு இலையில் இந்த பச்சரிசி சாதத்தைப் படையலாக வைக்கலாம். தயிர் ஊற்றி பக்தர்களுக்குத் தயிர் சாதமாகவும் கொடுக்கலாம்.

வீட்டில் இப்படி கும்பிட வாய்ப்பு இல்லாதவர்கள் பக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். அங்கு போய் உங்களால் முடிஞ்;ச அளவு அரிசி வாங்கிக் கொடுக்கலாம். இப்படி செய்தால் அன்றாடம் நமக்கு கிடைக்கக்கூடிய அன்னம் தங்குதடையின்றி கிடைக்கும்.

நாம் உயிர்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு அரிசியும் ஒவ்வொரு லிங்கத்திற்கு சமம். அதனால் தான் அன்னாபிஷேகம் நம் தரித்திரம் போக்கும். கடனைப் போக்கும். வறுமையை ஒழிக்கும். இந்த அரிய வாய்ப்பை அனைவருமே கடைபிடித்து சிவபெருமானின் அருளை பரிபூரணமாகப் பெற்று மகிழுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...