விவாகரத்தான நடிகருடன் ரகசிய வாழ்க்கை நடத்தும் சிம்பு பட நடிகை.. இப்படியொரு பஞ்சாயத்தா?

காதலர் தினம் படத்தின் மூலம் அறிமுகமான லேகா வாஷிங்டன் பாலிவுட் நடிகரான இம்ரான் கான் என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது அவர் லேகாவை பற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை லேகா வாஷிங்டன் காதலர் தினம் படத்தில் வரும் ஓ மவுரியா பாடலில் ஒரு நொடியில் வந்து செல்கிறார். அதுவே அவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமாகும். அதை தொடர்ந்து எஸ்எஸ் மியூசிக் விஜேவாக ரசிகர்கள் மனதை கவர்ந்தார். 90’ஸ் கிட்ஸ் மத்தியில் கிரேய்க்,மகா லட்சுமி, பூஜா ராமசந்திரன் மற்றும் லேகா வாஷிங்டனும் மிகவும் ரசிக்கும் விஜேவாக விளங்கினர். அத்தனை விஜேக்கள் இருந்தாலும் ஆங்கிலத்திலேயே அழகாக பேசி ரசிகர்களை ஈர்த்துள்ளார் லேகா வாஷிங்டன்.

பாலிவுட் நடிகரை காதலிக்கும் லேகா வாஷிங்டன்:

மேலும் லேகா தமிழ், தெலுங்கு,இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து நடிகையாகவும் வலம் வந்தார். காதலர் தினம் படத்தை தொடர்ந்து விஜேவாக இருந்து வந்த நேரத்தில் அவருக்கு பட வாய்ப்பும் வந்த்தது. அதை தொடர்ந்து லேகா ஜெயம் கொண்டான், உன்னாலே உன்னாலே, வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அதையடுத்து கெட்டவன் படத்தில் லேகா சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்த நிலையில் அந்த படம் நிருத்தப்பட்டது. அதை தொடர்ந்து சிம்புவும் லேகாவும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தது. அதன் பிறகு பல வருடங்களாக லேகா எங்கே சென்றார் என்றே தெரியாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் பாலிவுட் நடிகர் இம்ரான் கான் என்பவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.

தமிழில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜீ, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. சேட்டை படம் இந்தியில் அமீர் கான் தயாரிப்பில் உருவான டெல்லி பெல்லி படத்தின் ரீமேக்காகும். நடிகர் இம்ரான் கான் டெல்லி பெல்லி படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமானார்.மேலும் இம்ரான் கான் மெரே பிரதர் கி துல்ஹான், ஏக் மெயின் அவுர் ஏக் து, கட்டி பாட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

2011ம் ஆண்டு அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் 8 வருடங்கிளிலேயே தன் மனைவியை விவாகரத்தும் செய்தார். அதை தொடர்ந்து கொரோனா லாக்டவுனில் தான் லேகாவுடன் நெருங்கி பழகியதாகவும் தற்போது இருவரும் காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார் இம்ரான் கான்.

மேலும், தற்போது இம்ரான் கான் தன் மனைவியை பிரிந்ததற்கு காரணமே லேகா வாஷிங்டன் தான் என்றும் குடும்பத்தை பிரிக்க வந்தவள் என விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் பதில் அளிக்கும் விதமாக நானும் லேகாவும் ஆரம்பத்தில் நண்பர்களாக தான் இருந்தோம் பின்னர் தான் காதலிக்க தொடங்கினோம் அவர் ஒன்றும் குடும்பத்தை பிரிக்க வந்தவர் இல்லை என இம்ரான் கூறியுள்ளார். மேலும் விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...