“மோடி பற்றிப் பேசினாலே கண்ணில் நீர் வழிகிறது..“ இளையராஜா நெகிழ்ச்சி

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் குடமுழுக்கு சிறப்பாக அரங்கேறியதையொட்டி பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 5 நூற்றாண்டுகளாக நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து உத்திரபிர்தேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் ராமஜென்ம பூமியில் இந்தியாவே வியக்கும் ராமருக்குக் கோவில் கட்டி குடமுழுக்கை வெற்றிகரமாக நடத்தியுள்ளது மோடியின் பா.ஜ.க அரசு.

ஒருபக்கம் இதனை அரசியல் விழா என்று எதிர்கட்சிகள் சாட எதையும் கண்டுகொள்ளாமல் சரித்திர சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினரும் இசைஞானியுமான இளையராஜா பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரதகான சபை அரங்கில் நடைபெற்ற சென்னையில் அயோத்தி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா உரையாற்றும் போது, “ இன்றைய நாளில் நடக்கும் நிகழ்வு சரித்திரத்தில் இடம்பெறக் கூடியது. இதுபோன்ற நிகழ்வு இதுதான் முதல்முறையாக நடக்கிறது. உலகிலேயே இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்று சொல்லலாம். வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது சரித்திரத்தில் என்றும் அழியாத புகழைப் பெற்றுத் தரும். இந்த காரியத்தை முடித்த நமது பிரதமர் மோடிக்கு இந்த ஆழியாப் புகழ் சென்று சேரும். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம். யாரால் முடியும் இது.

அனைவராலும் இது செய்ய முடியுமா என்ன? பிரதமர் நரேந்திர மோடிக்கு என்று கடவுள் எழுதியுள்ளார். இந்தியாவுக்கு எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள். அவர்கள் என்ன செய்தார்கள். எது சரித்திரத்தில் நிற்கிறது என்று பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே சொல்லும் போதே கண்களில் நீர் வருகிறது,

இத்தனை ராமனையும் எங்க புடிச்சீங்க..? ஒரே பாட்டில் ஒட்டுமொத்த ராமன் புகழை அடக்கிய கண்ணதாசன்.. அடேங்கப்பா பெரிய வித்தைக்காரரா இருப்பாரு போலயே..!

இந்தியாவில் எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் ஆண்ட மன்னன் கட்டிய கோயிலாகத்தான் அது இருக்கும். மொத்த இந்தியாவுக்குமான கோயிலாக ஒன்று உருவாகியிருக்கிறது என்றால், அது அயோத்தி ராமர் கோயில்தான். மன்னர்கள் கோயில்களைக் கட்டிய நிலையில், ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்காக கோயில் கட்டியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று அவர் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews