வேதபாடசாலையான இசைஞானியின் வீடு

சமீபத்தில் மறைந்த நடிகரும், அய்யப்ப குருசுவாமியாக திகழ்ந்து பலருக்கு ஆன்மிக வழிகாட்டியாக இருந்த எம், என் நம்பியார் அவர்களின் நினைவு நாள் ஆராதனை விழா சென்னையில் நடந்தது.


இதில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா

நம்பியார் சுவாமிகள் வழிகாட்டலின்படி 1980 ஆம் ஆண்டு மட்டுமே மாலை போட்டு சபரிமலைக்கு நான் சென்றேன்.ஆனால் அதன் பிறகு என்னால் அங்கு செல்ல முடியவில்லை வேலை பளு அதிகமாக இருந்தது ஒரு காரணம். சினிமாக்காரர்களிடம் ஆன்மீக_சிந்தனைகள் உதிக்கச் செய்ததில் நம்பியார் சாமிக்கு முக்கிய பங்கு உண்டு. பலரை சபரிமலைக்கு மாலை போட வைத்ததிலும் அவருக்கு முக்கிய பங்கு உண்டு, என்று தெரிவித்தார்.

சபரிமலை செல்லும்போது இளையராஜாவுக்கு சொந்தமான தேக்கடி கெஸ்ட் ஹவுஸில் நம்பியார் சுவாமிகள் தங்கி செல்வாராம். இயற்கை எழில் சூழ காட்சியளிக்கும் இந்த கெஸ்ட் அவுஸ் நம்பியார் சுவாமிகள் மறைவுக்கு பிறகு வேதபாடசாலையாக மாறி விட்டதாம். அங்கு 5 வயது முதல் 12 வயதுடைய சிறுவர்கள் வேதங்கள் கற்று வருகிறார்களாம். இதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் வருகிறார்களாம். இதற்கு காரணம் நம்பியாரின் ஆத்மா தான், என்றும் இளையராஜா கூறியுள்ளார்.

Published by
Staff

Recent Posts