இளையராஜா முழுதாக தமிழ் சினிமாவில் எழுதிய முதல் பாடல்.. ஒவ்வொரு வரியும் சும்மா நச்சுன்னு இருக்கே..

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான காலம் மட்டும் இல்லாமல் இன்னும் எத்தனை புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும் என்றென்றைக்கும் இசையுலகில் ராஜாவாக திகழப் போகிறவர் தான் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா இன்று வரையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

ஒரு காலத்தில் இந்திய சினிமாவை இந்தி திரைப்பாடல்கள் கட்டி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமா மூலம் அறிமுகமான இளையராஜா ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் நம் பக்கம் திரும்பி பார்க்கவும் வைத்திருந்தார். அன்று முதல் இன்று வரை ராஜாவின் இசை என்றால் மொழி புரியாதவர்களுக்கு கூட பிடித்தமான ஒரு விஷயமாக அமைந்து விட்டது.

அதுமட்டுமில்லாமல், இன்றைய காலகட்டத்தில் வெஸ்டர்ன் திரை இசைக் கலாச்சாரம் புதுயுக இளைஞர்கள் மத்தியில் அதிக பரவலாக இருந்தாலும் பலரும் இளையராஜாவின் பாட்டையும் தற்போது வரை தொடர்ந்து கேட்டு தான் வருகின்றனர். காதலில் விழுந்தாலும், காதலில் தோற்றாலும், தாலாட்டு கேட்பதற்கும், அன்பை கொடுப்பதற்கும் என எந்த தருணங்களை எடுத்துக் கொண்டாலும் இளையராஜா பாட்டு அனைத்திற்குமே பொருந்தி போகும்.

அப்படிப்பட்ட இசைஞானியாக இருக்கும் இளையராஜா பல திரைப்பட பாடல்களில் சில சில இடங்களிலும் அதன் பின்னர் நிறைய பாடல்களிலும் எழுதியுள்ளார். அன்னக்கிளி திரைப்படத்திலேயே ஒரு சில பாடல்களில் தனது வரிகளை மாற்றி எழுதி இசையை உருவாக்கி இருந்த இளையராஜா, முதல் முதலாக முழு வரிகளையும் எழுதி முடித்த பாடலைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்த இளையராஜா, “அன்னக்கிளி தொடங்கி நான் எத்தனையோ திரைப்படங்களில் பல்லவிகளில் வரிகள் எழுதி உள்ளேன். ஆனால் நான் முழுக்க முழுக்க வரிகள் எழுதிய பாடல் என்றால் அது இதயம் ஒரு கோவில் தான்” என குறிப்பிட்டிருந்தார். மோகன், அம்பிகா, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் தான் இதயகோவில். இளையராஜா இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களுமே இன்று வரையிலும் ரசிகர்கள் முணுமுணுக்கும் 80 ஸ் பாடல் ஆல்பங்களில் ஒன்றாகும்.

அதிலும் இதயம் ஒரு கோவில் என்ற பாடலை இளையராஜா இசையமைத்திருந்ததுடன் பாடலை பாடி வரிகளையும் எழுதி இருந்தார். இதில் வரும், ‘உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே’, ‘என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே’ என பல வரிகள் இசை பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும் உண்டு பண்ணிய வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews