இப்போ இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் இவங்கதான் காரணம்… இவங்க இல்லாமல் என்னோட சாதனைகள் இல்லை… சின்மயி எமோஷனல்…

சின்மயி ஸ்ரீபாதா 2008 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘சப்தஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அந்த நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்றார். அதன் மூலம் திரைப்படங்களில் பாட ஆரம்பித்தார். மிக இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் சின்மயி ஸ்ரீபாதா.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடலை பாடி பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தின் வாயிலாக டப்பிங் கலைஞராகவும் தனது பணியை தொடங்கினர். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் செய்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, போன்ற பல மொழி திரைப்படங்களில் பாடல்கள் பாடியும், டப்பிங் செய்தும் பிரபலமானவர். ‘மய்யா மய்யா’, ‘கிளிமாஞ்சாரோ’, ‘சஹானா சாரல்’, ‘வாராயோ வாராயோ’, போன்ற பாடல்கள் இவர் பாடியதில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

பாடல்கள் மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பாடலாசிரியர் வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று ஓப்பனாக பேசி சர்ச்சைக்கு உள்ளானார். மீட்டூ என்ற ஹாஷ்டக்கை உருவாக்கி ட்ரெண்ட் ஆனவர். யாரெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்களோ அது பெரியவர், குழந்தை, ஆண், பெண் என அனைவரும் மீட்டூவில் வந்து வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளுங்கள் என்று சொல்லி வந்தார். இதன் மூலம் பல பிரச்சனைகளையும் சந்தித்தார்.

இந்நிலையில் தற்போது JFW சின்மயிக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது. அதன் பின்பு மேடையில் பேசிய சின்மயி, கடந்த சில ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு பற்றி நிறைய பேசியுள்ளேன். பிரச்சனைகளையும் சந்தித்தேன். அதையும் தாண்டி இன்று நான் சாதித்து இருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர், மாமனார், மாமியார் மற்றும் என் புகுந்த வீட்டை சார்ந்தவர்கள் தான். அவர்கள் இல்லையென்றால் என்னால் சாதித்திருக்க முடியாது என்று எமோஷனலாக பகிர்ந்துள்ளார் சின்மயி ஸ்ரீபாதா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...